நிதி அமைச்சகம்
உள்கட்டமைப்பில் ஸ்டார்ட்-அப்புகளுக்கு ஆதரவளித்தல்: பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் இன்வெஸ்ட் இந்தியாவின் பயிலரங்கம்
Posted On:
02 SEP 2021 5:45PM by PIB Chennai
உள்கட்டமைப்பில் புது நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட்-அப்) ஆதரவளித்தல் குறித்த காணொலி பயிலரங்கம் ஒன்றை மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் இன்வெஸ்ட் இந்தியா இன்று ஏற்பாடு செய்தன.
நிகழ்ச்சியில் பேசிய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திரு சேத், அணுகலை மேம்படுத்தும் வகையில், அதிக கட்டமைப்புகளை தவிர்த்து, திறன்மிகு கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்டுமானம், சொத்து மேலாண்மை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு நடவடிக்கைகளில் தொழில்நுட்பம் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றும், புது நிறுவனங்கள் மற்றும் அரசு இவற்றில் இணைந்து பணியாற்றலாம் என்றும் அவர் கூறினார்.
‘உள்கட்டமைப்பில் புதுமைகளை புகுத்துதல்: ஸ்டார்ட் அப் வழி’ எனும் அறிக்கை கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை பயன்படுத்தி உள்கட்டமைப்பு துறையில் வளர்ச்சியை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துரைக்கிறது. இன்வெஸ்ட் இந்தியா மற்றும் இந்தியா இன்வெஸ்ட்மெண்ட் கிரிட் இணையதளங்களில் இந்த அறிக்கை கிடைக்கும்.
பொருளாதார விவகாரங்கள் துறையின் கீழ் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பயிலரங்கு, பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து ஸ்டார்ட் அப் சவால்களை அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடங்குவதற்கான முன்னோட்டமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751459
*****************
(Release ID: 1751511)
Visitor Counter : 187