அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

வாழும் தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு காற்றை தூய்மைப்படுத்தும் உலகின் முதல் சீர்மிகு கருவி: ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய நிறுவனம் கண்டுபிடிப்பு

Posted On: 01 SEP 2021 12:12PM by PIB Chennai

ரோபார் மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் இளம் விஞ்ஞானிகள் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவுகளின்  ஆசிரியர்கள் ஆகியோர், வாழும் தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட காற்றை தூய்மைப்படுத்தும் கருவியை உருவாக்கியுள்ளனர். “யூ பிரீத் லைஃப்என்று அழைக்கப்படும் இந்தக் கருவி, வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், அலுவலகங்கள் போன்ற உட்புற இடங்களில் காற்றைத் தூய்மைப்படுத்தும்.

தூய்மையான சுவாசத்திற்கு வழிவகுக்கும் உலகின் முதல் நவீனசீர்மிகு உயிரி வடிகட்டி' என்று கருதப்படும் இந்தக் கருவியை ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் புதிய நிறுவனமான அர்பன் ஏர் லேபாரட்டரி கண்டுபிடித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் வேளாண் மற்றும் நீர் தொழில்நுட்ப வளர்ச்சி முனையமாக அறிவிக்கப்பட்டுள்ள ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இந்தக் கருவி பாதுகாக்கப்பட்டது.

உட்புறங்களில் காற்று தூய்மைபடுத்தப்படாமல் இருந்தால் கொவிட்-19 தடுப்பூசியினால் மட்டுமே பணியிடங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் முழுமையான பாதுகாப்பை அளிக்க முடியாது என்பதை புதிய ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளதை அடுத்து, காற்றைத் தூய்மைப்படுத்துவதில் இந்தக் கருவி மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ரோபார் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் ராஜீவ் அஹுஜா தெரிவித்தார்சந்தைப்படுத்துவதற்காக மிகப்பெரிய அளவிலும் இதனைத் தயாரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

சுவாசப் பிரச்சினைகள் உள்ள நோயாளிகள் பயனடையும் வகையில்யூ ப்ரீத் லைஃப்கருவி செயல்படுவதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் விநய் மற்றும் டாக்டர் தீபேஷ் அகர்வால் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751050

-----


(Release ID: 1751081) Visitor Counter : 293


Read this release in: English , Urdu , Hindi , Punjabi