வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஜூலை 2021-க்கான எட்டு முக்கியத் தொழில்களின் குறியீட்டு எண் (அடிப்படை: 2011-12=100)

Posted On: 31 AUG 2021 5:00PM by PIB Chennai

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துக்கான துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் ஜூலை 2021-க்கான எட்டு முக்கியத் தொழில்களின் குறியீட்டு எண்ணை அறிவித்துள்ளது.

எட்டு முக்கியத் தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண்ணின் வளர்ச்சி விகிதம் 2021 ஜூலையில் 134.0 ஆக இருந்தது. 2020 ஜூலையுடன் ஒப்பிடும் போது இது 9.4 சதவீதம் (தற்காலிகம்) அதிகமாகும்.

நிலக்கரி, இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சார தொழில்களின் உற்பத்தி 2020 ஜூலையுடன் ஒப்பிடும் போது 2021 ஜூலையில் அதிகரித்திருந்தது.

எட்டு முக்கிய தொழில்களின் குறியீடுகளின் சுருக்கம்:

நிலக்கரி உற்பத்தி 2020 ஜூலையுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டு ஜூலையில் 18.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி 2020 ஜூலையுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டு ஜூலையில் 3.2 சதவீதம் குறைந்துள்ளது.

இயற்கை எரிவாயு உற்பத்தி 2020 ஜூலையுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டு ஜூலையில் 18.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெட்ரோலிய சுத்திகரிப்பு தயாரிப்புகள் உற்பத்தி 2020 ஜூலையுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டு ஜூலையில் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

உரங்கள் உற்பத்தி 2020 ஜூலையுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டு ஜூலையில் 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

எஃகு உற்பத்தி 2020 ஜூலையுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டு ஜூலையில் 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

சிமென்ட் உற்பத்தி 2020 ஜூலையுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டு ஜூலையில் 21.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

மின்சார உற்பத்தி 2020 ஜூலையுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டு ஜூலையில் 9.0 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750778

----



(Release ID: 1750875) Visitor Counter : 261


Read this release in: English , Hindi , Punjabi