இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒரே நாளில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இந்தியாவின் வெற்றி பயணம் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தொடர்கிறது

Posted On: 30 AUG 2021 7:37PM by PIB Chennai

பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி திங்களாய் இன்று அமைந்தது. காலை முதல் ஐந்து பதக்கங்களை நாடு வென்றது. துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண்ணாக அவனி லேகரா சரித்திரம் படைத்த நிலையில், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கம் வென்றார்.

இந்திய ஈட்டி எறிதல் வீரரான தேவேந்திர (இந்திய விளையாட்டு ஆணையத்தின் காந்தி நகர் மையத்தில் பயிற்சி பெற்றவர்) வெள்ளி பதக்கத்தையும், ராஜஸ்தானை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் சுந்தர் சிங் குர்ஜார் வெண்கல பதக்கத்தையும் வென்றனர். மேலும், முதல்முறை பாராலிம்பிக்கில் கலந்து கொண்ட யோகேஷ் கத்துனியா வட்டெறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆக, ஒரே நாளில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இந்தியாவின் வெற்றி பயணம் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் தொடர்கிறது

தேவேந்திரா மற்றும் சுந்தர் ஆகிய இருவரும், இந்திய விளையாட்டு ஆணையத்தின் டாப்ஸ் திட்டத்தின் அரசின் நிதியுதவியை பெற்றவர்கள் ஆவார்கள்.

டோக்கியோவுக்கு கிளம்புவதற்கு முன்னர் பேசிய சுந்தர், தான் சிறப்பான நிலையில் இருப்பதாகவும், ரியோ ஒலிம்பிக்கில் தவறவிட்ட பதக்கத்தை டோக்கியோ பாராலிம்பிக்கில் வெல்ல உறுதியுடன் இருப்பதாகவும் கூறினார்.

தேவேந்திரா மற்றும் சுந்தர் போலவே, யோகேஷும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் டாப்ஸ் திட்டத்தின் அரசின் நிதியுதவியை பெற்றவர் ஆவார். மேலும், பயிற்சி மற்றும் இதர ஆதரவுகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டன

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750536

 

-----

 


(Release ID: 1750585) Visitor Counter : 250


Read this release in: English , Urdu , Hindi , Punjabi