பாதுகாப்பு அமைச்சகம்
புனேவில் நடைபெற்ற முன்னேறிய தொழில்நுட்பத்திற்கான ராணுவ நிறுவனத்தின் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரை
Posted On:
27 AUG 2021 6:10PM by PIB Chennai
பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற முன்னேறிய தொழில்நுட்பத்திற்கான ராணுவ நிறுவனத்தின் (டிஐஏடி) ஆறாவது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 2021 ஆகஸ்ட் 27 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அங்கு வருகை புரிந்தார்.
நிறுவனத்தின் தலைவர் மற்றும் வேந்தரான அவர், ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்பு தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த முன்னேறிய படிப்புகளை வழங்கி நாட்டை கட்டமைப்பதில் டிஐஏடி பங்காற்றுவது பெருமையளிப்பதாக கூறினார்.
குவாண்டம் தொழில்நுட்பம், எந்திரவியல், தானியங்கியியல் மற்றும் ராணுவ தொழில்நுட்ப துறைகளில் புதிய பள்ளிகளை டிஐஏடி தொடங்கியிருப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த திறமைமிக்க பேராசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுடனான கூட்டு முன்னணி தொழில்நுட்ப மையமாக டிஐஏடி-ஐ மாறும் என்றும் அவர் கூறினார்.
குவாண்டம் தொழில்நுட்பம், எந்திரவியலில் பல்முனை ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் திட்டத்தை டிஐஏடி தொடங்கியுள்ளதை அவர் குறிப்பிட்டார். சில தொழில்நுட்பங்களின் செய்முறை விளக்கங்களையும் அவர் பார்வையிட்டார்.
இத்தகைய நடவடிக்கைகள் முக்கிய ராணுவ தொழில்நுட்பங்களில் தற்சார்புக்கு வழிவகுக்கும் வேளையில், திறமையான மாணவர்கள் எம் டெக், எம் எஸ் சி மற்றும் முனைவர் படிப்புகளில் சேர்வது சமீப ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிறுவனத்தில் கல்வியியல் வளர்ச்சியை பறைசாற்றும் வகையில், புத்தகங்கள், காப்புரிமைகள் மற்றும் ஆராய்ச்சி அறிக்கை வெளியீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் டிஐஏடி-யின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், இந்திய வம்சாவளியை சேர்ந்த திறமைமிக்க பேராசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர டிஐஏடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதன் மூலம் முன்னணி தொழில்நுட்ப மையமாக டிஐஏடி மாறும் என்றும் கூறினார். முக்கிய ராணுவ தொழில்நுட்பங்களில் தற்சார்புக்கு வழிவகுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதற்காக டிஐஏடி-யை அவர் பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749625
*****************
(Release ID: 1749686)