பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிழக்கு விமானப்படை பிரிவு தளபதிகளின் மாநாடு

प्रविष्टि तिथि: 27 AUG 2021 4:54PM by PIB Chennai

2021 ஆகஸ்ட் 26 மற்றும் 27 அன்று நடைபெற்ற கிழக்கு விமானப்படை பிரிவு தளபதிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஷில்லாங்கில் உள்ள கிழக்கு விமானப்படை பிரிவின் தலைமையகத்திற்கு விமானப்படை தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் ஆர் கே எஸ் பதூரியா வருகை புரிந்தார். கிழக்கு விமானப்படை பிரிவின் தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் அமித் தேவ் அவரை வரவேற்றார்.

கிழக்கு விமானப்படை பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள செயல்பாட்டு இலக்குகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும், தயார்நிலை குறித்தும் இரண்டு நாள் மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டது.

மாநாட்டில் உரையாற்றிய விமானப்படை தளபதி, கிழக்கு விமானப்படை பிரிவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததோடு, திறன் வளர்த்தல் மற்றும் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தார்.

இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்குமாறு தளபதிகளை கேட்டுக்கொண்ட அவர், புதிய தலைமுறை அமைப்புகள் மற்றும் ஆயுத தளங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் திறமைகள் முழு அளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

கிழக்கு விமானப்படை பிரிவின் அனைத்து வீரர்களின் பங்களிப்பையும் பாராட்டிய விமானப்படை தளபதி, சிறந்து விளங்கிய மையங்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749578

*****************


(रिलीज़ आईडी: 1749648) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी