அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பிரபஞ்சத்தில் மூன்று மிகப் பெரிய கருந்துளைகள் ஒன்றிணைகின்றன: இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
Posted On:
27 AUG 2021 9:28AM by PIB Chennai
மூன்று விண்மீன் திரள்களிலிருந்து, மூன்று மிகப் பெரிய கருந்துளைகள் ஒன்றிணைந்து, மூன்று மடங்கு தீவிரமான விண்மீன் மையப் பகுதியை உருவாக்கியுள்ளன என்பதை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் திரளின் மையப்பகுதி வழக்கத்தை விட பிரகாசமான பகுதியாக காணப்படுகிறது.
நமது அருகில் உள்ள பிரபஞ்சத்தில் ஏற்பட்டுள்ள, இந்த அரிய நிகழ்வு, சிறியளவிலான ஒன்றிணையும் விண்மீன் திரள் குழுக்கள் பல மடங்கு அதிசயமான கருந்துளைகளைக் கண்டறிய சிறந்த ஆய்வகங்களாக இருப்பதைக் குறிக்கிறது மற்றும் இதுபோன்ற அரிய நிகழ்வுகளைக் கண்டறியும் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, விண்மீன் பரிணாமத்தை பாதிக்கும் ஒரு முக்கிய காரணி விண்மீன் திரள்களுக்கு இடையேயான தொடர்புகள் ஆகும், இது விண்மீன் திரள்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக நகர்ந்து ஒன்றுக்கொன்று மிகப்பெரிய ஈர்ப்பு சக்திகளை செலுத்தும்போது நிகழ்கின்றன.
இது போன்ற விண்மீன் திரள்கள் தொடர்பின்போது, மிகப் பெரிய கருந்துளைகள் ஒன்றுக்கொன்று அருகருகே வரலாம். இந்த இரட்டை கருந்துளைகள், தங்கள் சுற்றுப்புறத்திலிருந்து வாயுக்களை உட்கொள்ள தொடங்கி, தீவிர விண்மீன் திரள் மையப் பகுதியாகின்றன.
இரண்டு விண்மீன் திரள்கள் மோதினால், அவற்றின் இயக்க ஆற்றல், சுற்றியுள்ள வாயுவுக்கு மாறுவதன் மூலம் அவற்றின் கருந்துளையும் நெருங்கி வரும் என்று இந்திய வான்இயற்பியல் மைய(IIA) குழு விளக்குகிறது. அப்போது இரு கருந்துளைகளுக்கு இடையேயான தூரம் குறைந்து, இயக்க ஆற்றலை மேலும் இழக்கமுடியாமல், ஒன்றாக இணையும். இது விண்ணியல் ஆரம்ப பிரச்சினை என அறியப்படுகிறது. மூன்றாவது கருந்துளை இப்பிரச்சினையை சரிசெய்யும். இணையும் இரு கருந்துளைகள், தங்கள் ஆற்றலை மூன்றாவது கருந்துளைக்கு மாற்றி ஒன்றுடன் ஒன்று இணையும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749437
(Release ID: 1749549)
Visitor Counter : 346