விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயிகளுக்கான தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரச்சாரத்தை மத்திய வேளாண் அமைச்சர் தொடங்கினார்

Posted On: 26 AUG 2021 8:05PM by PIB Chennai

உணவு தானிய துறையில் பெரிய சாதனைகளை இந்தியா செய்துள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று கூறினார்.

வேளாண் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் உலகத்திலேயே முதல் அல்லது இரண்டாவது நாடாக நமது தேசம் திகழ்கிறது. நம்முடைய விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளிடம் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. நாம் போட்டியிட்டால், அனைத்து பொருட்களிலும் முதல் இடத்தை பெறலாம்,” என்று விவசாயிகளுக்கான தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கூறினார்.

அதிக உற்பத்தியும், அதிகரித்துள்ள உற்பத்தி திறனும் இன்றைக்கு நம்மனைவருக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. சுதந்திரத்தின் 75-ம் ஆண்டில் நிற்கும் நாம், நம்மை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு, சவால்களை கருத்தில் கொண்டு அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கான தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரச்சார தொடக்க நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய திரு தோமர், எந்த பயிர்களை விளைவிக்க வேண்டும் மற்றும் எந்த விதைகளை எந்த பகுதிகளில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சி குழு தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்தோடு விவசாயம் மற்றும் விவசாயிகளை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உற்பத்தி குறித்த நிபுணத்துவம் நம்மிடம் இருக்கும் போதிலும், இதை தொடர்ந்து பேண வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1749349

 

-----



(Release ID: 1749419) Visitor Counter : 257


Read this release in: English , Urdu , Hindi , Bengali