எரிசக்தி அமைச்சகம்
ஒழுங்குமுறை தொடர்பான விஷயங்களை கண்காணித்து சரியான நேரத்தில் தீர்வுகளை வழங்குவதற்காக ஒழுங்குமுறை கண்காணிப்பு பிரிவை மின்சார அமைச்சகம் அமைத்துள்ளது
प्रविष्टि तिथि:
26 AUG 2021 4:20PM by PIB Chennai
மின்சார ஒழுங்குமுறையாளர்களுடான கூட்டம் ஒன்றை மத்திய மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு ஆர் கே சிங் இன்று நடத்தினார்.
ஒழுங்குமுறை தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்த விதிகளை உருவாக்க ஒழுங்குமுறையாளர்கள் உறுதியேற்றுக் கொண்டனர். மாநில ஆணையங்களால் இந்த விதிகள் ஏற்றுக்கொள்ளப்படும். சிறந்த செயல்முறைகளை பின்பற்றுவதற்கும், சீர்திருத்தம் மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளை விரைந்து செயல்படுத்தவும் மாநில ஆணையங்களுக்கு இது உதவும்.
தேவை, ஒப்பந்த காலம், எரிசக்தி கலப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான இலக்குகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மின்சார கொள்முதலுக்கான வழிகாட்டுதல்களை மின்சார அமைச்சகம் உருவாக்கி வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விநியோக நிறுவனங்கள் மற்றும் மாநில ஆணையங்கள் ஒழுங்குமுறை விதிகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக ஒழுங்குமுறை கண்காணிப்பு பிரிவை மின்சார அமைச்சகம் அமைத்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749247
----
(रिलीज़ आईडी: 1749396)
आगंतुक पटल : 297