பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் செயல்பாடு ‘ஆட்சி அதிகாரம் என்பதிலிருந்து பங்காக மாற வேண்டும்’ : டாக்டர் ஜித்தேந்திர சிங் அறிவுரை
Posted On:
26 AUG 2021 4:08PM by PIB Chennai
‘‘சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆதரவுடன், மத்திய அரசின் மிக லட்சிய சீர்திருத்த திட்டமான ‘கர்மயோகி’ மூலம், சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் செயல்பாட்டை ஆட்சி அதிகாரத்திலிருந்து, பங்காக மாற்றும் ஒரு முன்னோடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் நம்பிக்கையுடன், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியை செய்ய முடிகிறது’’ என மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.
இந்திய பொது நிர்வாக கழகத்தில், சிவில் சர்வீஸஸ் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் பயிலரங்கில் உரையாற்றிய டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறுகையில், ‘‘சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்கிறது. கடந்த 75 ஆண்டுகளில், இந்தியா நிலைத்தது மட்டும் அல்லாமல், ஒரு தேசமாக வளர்ந்துள்ளது என அமைச்சர் கூறினார்.
திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மிகப் பெரிய நிர்வாக சீர்திருத்தங்களில் ஈடுபட்டது என்றும், புதிய இந்தியாவுக்கு ஏற்ற கலாச்சாரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். வழக்கமான நடைமுறையை தாண்டி சிந்திக்கும் தைரியமும், திடமான நம்பிக்கையும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உள்ளது என அவர் கூறினார்.
தற்போதைய காலத்தில், சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பங்கு குறித்து பேசிய மத்திய அமைச்சர், அரசு ஊழியர்களின் கடமைகள் கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்டது மற்றும் அவர்களின் பொறுப்பு அதிகரித்து விட்டது என அமைச்சர் கூறினார். பொறுப்புள்ள எந்த ஒரு நாட்டுக்கும், எளிதாக வாழ்வதை உறுதி செய்வதுதான் இறுதியான நோக்கம் எனவும், அந்த வழியில் இந்தியா நன்றாக சென்று கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநில பணிக்கு செல்வதற்கு முன்பாக, உதவி செயலாளர்களாக கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற புரட்சிகரமான முடிவை திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2016ம் ஆண்டு எடுத்தது. அடுத்தாண்டு ஜனவரிக்கும், மாவட்ட அளவில் பொது தகுதி தேர்வை நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.
அறிவியல் பூர்வமான வழிமுறைகளை, சிவில் சர்வீஸ் அதிகாரிகளுடன் டாக்டர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துக் கொண்டார். அப்போதுதான் எதிர்கால சவால்களுக்கு, அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும்.
மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலாளர் திரு தீபக் காந்தேகர், இந்திய பொது நிர்வாக கழகத்தின் தலைமை இயக்குனர் திரு எஸ்.என்.திரிபாதி, பதிவாளர் திரு அமிதாப் ரஞ்சன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-----
(Release ID: 1749314)
Visitor Counter : 213