சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 222-வது நாள்: 60 கோடிக்கும் அதிகமானோருக்கு இது வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது
प्रविष्टि तिथि:
25 AUG 2021 8:05PM by PIB Chennai
இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 60 கோடிக்கும் அதிகமானோருக்கு (60,24,25,271) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 66 லட்சத்திற்கும் அதிகமான (66,22,337) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்திற்கான இறுதி அறிக்கைகள் இன்று பின்னரவில் நிறைவு செய்யப்படும்.
இதுவரை ஒட்டுமொத்தமாக சுகாதார பணியாளர்களில் 10355095 பேருக்கு முதல் டோசும், 8270913 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 18311679 பேருக்கு முதல் டோசும், 12774285 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 227378071 பேருக்கு முதல் டோசும், 22221573 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் 125227082 பேருக்கு முதல் டோசும், 50558615 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 84432720 பேருக்கு முதல் டோசும், 42895238 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 465704647 முதல் டோசுகளும் 136720624 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இன்று மட்டும் (2021 ஆகஸ்ட் 21), சுகாதார பணியாளர்களில் 742 பேருக்கு முதல் டோசும், 19152 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 1990 பேருக்கு முதல் டோசும், 60555 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 3432703 பேருக்கு முதல் டோசும், 998964 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் 868543 பேருக்கு முதல் டோசும், 570492 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 368377 பேருக்கு முதல் டோசும், 300819 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 4672355 முதல் டோசுகளும் 1949982 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 இடமிருந்து மக்களை காப்பாற்றக்கூடிய கருவியாக தடுப்புமருந்து வழங்கல் இருப்பதால், உயர்மட்ட அளவில் அது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749031
-----
(रिलीज़ आईडी: 1749085)
आगंतुक पटल : 247