சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்: கனிம ஆய்வு கார்பரேஷன் நிறுவனத்தின் இரத்ததான முகாம்

Posted On: 25 AUG 2021 5:43PM by PIB Chennai

விடுதலையின் அம்ருத் மகோத்ஸவத்தை கொண்டாடும் வகையில், சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான கனிம ஆய்வு கார்பரேஷன் நிறுவனம் (MECL), நாக்பூர் ரோட்டரி கிளப்புடன் இணைந்து இரத்ததான முகாமை, நாக்பூரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் நடத்தியது.

இதை எம்இசிஎல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரஞ்சித் ராத் தொடங்கி வைத்தார்இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ரஞ்சித் ராத், அதிக மக்கள் தொகை உள்ள நாட்டில் இது போன்ற முகாம்களின் அவசியத்தை வலியுறுத்தினார். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நலனுக்கும் எம்இசிஎல் நிறுவனம் பணிவுடன் செயல்படுவது குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்இந்த முகாமில் எம்இசிஎல் நிறுவனத்தின் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரத்த தானம் செய்தனர்.

இந்த முகாமில் பங்கறே்றதற்காக, லைப் லைன் ரத்த வங்கி மருத்துவர்களுக்கும், ரோட்டரி கிளப் உறுப்பினர்களுக்கும் டாக்டர் ராத் நன்றி தெரிவித்தார்.

-----



(Release ID: 1749083) Visitor Counter : 181


Read this release in: English , Urdu , Hindi , Punjabi