மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்ப அமைச்சரின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான கனவு சம்ரித் திட்டமாக உருவெடுத்தது
Posted On:
25 AUG 2021 5:06PM by PIB Chennai
இந்தியாவின் புது நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்) மற்றும் அவற்றுக்கான சூழலியலை உலகத்திலேயே சிறந்ததாக ஆக்குவதற்காக தொடர்ந்து உழைக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி, நமது நாட்டில் புதிய வகை வளங்களை உருவாக்குபவையாக ஸ்டார்ட்-அப்புகள் விளங்குகின்றன என்று தமது சுதந்திர தின உரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
பிரதமரின் இந்த லட்சியத்தை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் வலியுறுத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், “மிகவும் சவாலான ஆரம்ப கட்டத்தில் புது நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோரை அரசு ஆதரிக்கும்,” என்று கூறினார்.
சம்ரித் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஸ்டார்ட்-அப்புகளுக்கு நிதி ஆதரவை இத்திட்டம் அளிப்பதோடு, அவை வெற்றிகரமாக திகழ்வதற்கான திறன்களை உருவாக்கவும் உதவும் என்றார்.
பிரதமரின் லட்சியத்தை வலியுறுத்திய திரு வைஷ்ணவ், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பெரும் ஊக்கத்தின் ஆதாரமாக தொழில்நுட்பமும் இளைஞர் சக்தியும் திகழ்வதாக குறிப்பிட்டார்.
நமது சமுதாயத்திற்கு இன்றைக்கு பலவிதமான முன்னெடுப்புகள், புதிய பொருட்கள் மற்றும் புதிய சேவைகள் தேவை என்று மேலும் கூறிய அமைச்சர், இதன் மூலம் சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ளவர்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கை முறை கிடைக்கும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748914
----
(Release ID: 1749080)
Visitor Counter : 294