கனரகத் தொழில்கள் அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்ஸ்வம்: சாமர்த் உத்யோக் மையங்களின் நிபுணர்கள், பேச்சுகள் குறித்த இணையக் கருத்தரங்கை நடத்தியது சிஎம்டிஐ (மத்திய உற்பத்தித் தொழில்நுட்ப மையம்)

Posted On: 24 AUG 2021 4:44PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தைக் கொண்டாட, திறமையான தொழில் மையங்களின்  நிபுணர்கள், பேச்சுகள் பற்றிய இணையக் கருத்தரங்கை மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெங்களூரில் உள்ள மத்திய உற்பத்தி தொழில்நுட்ப மையம் (CMTI), சாமர்த் உத்யோக் பாரத் 4.0 தளத்தின் கீழ் நடத்தியதுஉள்நாட்டுத் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சீர்மிகு உற்பத்தி மற்றும் தொழில்துறை 4.0-ல் கூட்டாக செயல்படுவதற்கான வழிகளை சாமர்த் உத்யோக் மையங்களின் நிபுணர்களிடம் இருந்து கேட்பதற்காக இந்த இணையக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

தொழில்துறையின் 4.0 எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது, இந்தியத் தொழில்நுட்ப துறையினருக்கு அதன் பயன்கள் ஆகியவற்றை சிஎம்டிஐ பரப்புகிறது. நான்காவது தொழில்துறைப் புரட்சியை தொழில்துறை 4.0 குறிக்கிறது. இது உற்பத்தித் துறையில் கம்ப்யூட்டர் - உடல் உழைப்பின் மாற்றமாக உள்ளது.

இந்த இணையக் கருத்தரங்கு, ஆராய்ச்சி மையங்கள், கல்வி நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளை நடத்துபவர்களுக்காக நடத்தப்பட்டது

பெங்களூர் சிஎம்டிஐ இயக்குநர் டாக்டர். நாகஹனுமய்யா, பெங்களூர் ஐஐஎஸ்சி பேராசிரியர் அமரேஷ் சக்ரவர்த்தி, தில்லி ஐஐடி பேராசிரியர் சுனில் ஜா உட்பட பலர் முக்கிய உரை நிகழ்த்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748558

 



(Release ID: 1748686) Visitor Counter : 253


Read this release in: English , Urdu , Hindi , Punjabi