அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தொழில்துறை – கல்வி நிறுவனங்கள் இணைப்புக்கு சிஎஸ்ஐஆர் - சிஎம்இஆர்ஐ-யின் ‘சந்தையுடன் கூட்டுறவு யுக்தி’

Posted On: 24 AUG 2021 5:13PM by PIB Chennai

தொழில்துறை – கல்வி நிறுவனங்கள் இணைப்புக்கு, ‘சந்தையுடன்  கூட்டுறவு யுக்தி-யை சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் )- சிஎம்இஆர்ஐ (மத்திய இயந்திரப் பொறியியல் ஆய்வு மையம்)  பின்பற்றுகிறது. இந்த நிறுவனத்தின் புத்தாக்க ஆற்றல் இதன் மூலம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.  

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்தும் காணொலி நிகழ்ச்சியில்  துர்காபூர் சிஎஸ்ஐஆர் -  சிஎம்இஆர்ஐ இயக்குநர் பேராசிரியர் ஹரிஸ் ஹிரானி பேசியதாவது:

எதிர்காலத்தில் உலக உற்பத்தி மையமாக மாற இந்தியா விரும்புகிறது. இதற்கான வலுவான உற்பத்திப் பொருளாதாரத்துக்கான அடித்தளம் அமைப்பதில் துரித நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கிறது. தரத்தில் சமரசம் இல்லாமல், மலிவு விலை தொழில் நுட்பங்களை அதிகரிப்பது தான் இந்திய உற்பத்தித் துறையில் முக்கியமான சவாலாக உள்ளது.

மென்பொருள்கள் முதல் தொழில்நுட்பங்கள் வரை நவீன தொழில்நுட்பங்களின் பாதுகாவலராக சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உள்ளது. தங்களின் உள்கட்டமைப்புகளை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும், தொடக்க நிறுவனங்களுக்கும் நியாயமான கட்டணத்தில் சிஎஸ்ஐஆர்- சிஎம்இஆர்ஐ திறந்துவிட்டுள்ளது. 

சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவது மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கும், எதிர்காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தை உருவாக்குபவர்களுக்கும் பயனளிக்கும். 

அதனால் தான் சந்தைகளுடன் கூட்டுறவு யுக்தியை சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ பின்பற்றுகிறது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் புத்தாக்க ஆற்றல் குறு,  சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

டாட்டா ஸ்டீல், இந்துஸ்தான் யுனிலீவர், வேதாந்தா, டால்மியா, இஸ்ரோ, ஐஐடிக்கள், என்ஐடி, ஓஎன்ஜிசி, ஆயுத தொழிற்சாலை வாரியம், குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களுடன்  ஏற்கனவே கூட்டு சேர்ந்து தொழில்நுட்பச் சேவைகளை சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ வழங்கியுள்ளது.

இவ்வாறு திரு ஹரிஸ் ஹிரானி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748580.

-----


(Release ID: 1748676) Visitor Counter : 240


Read this release in: English , Urdu , Hindi , Punjabi