நிலக்கரி அமைச்சகம்
கொவிட் தடுப்பூசியை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கிய முதல் பொதுத்துறை நிறுவனம், வடக்கு நிலக்கரிச் சுரங்க நிறுவனம்
प्रविष्टि तिथि:
24 AUG 2021 5:24PM by PIB Chennai
இந்தியக் கரி நிறுவனத்தின், வடக்கு நிலக்கரிச் சுரங்க நிறுவனம், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தனது அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்கிய முதல் பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 13000 முழு நேர ஊழியர்கள், 16000 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 20,000 பேர் என மொத்தம் சுமார் 50 ஆயிரம் பேர் நிறுவனம் இயங்கும் பகுதிக்கு அருகில் வசிக்கின்றனர்.
“எதிர்பாராத கொவிட் நெருக்கடியின் போது எங்களது நிலக்கரி ஊழியர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி இடையறாத நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்வதற்காக கடுமையாகப் பணியாற்றினார்கள். அவர்கள் தான் எங்களது உண்மையான சொத்துக்கள் என்பதால் அவர்களின் ஆரோக்கியமும், அவர்கள் குடும்பத்தினரது ஆரோக்கியமும், பாதுகாப்பும் எங்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டோம்”, என்று நிறுவனத்தின் தலைவரும் மேலாண் இயக்குநருமான திரு பிரபாத் குமார் சின்ஹா தெரிவித்தார்.
உள்ளூர் நிர்வாகத்தின் முழு ஆதரவுடன் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கிய நிறுவனம், படிப்படியாக தனது அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பல்வேறு இலக்குக் குழுக்கள் கண்டறியப்பட்டு, வீடு வீடாகச் சென்று தடுப்பூசிகள் போடும் சிறப்பு முகாம்களை நடத்தி இந்த நிறுவனம் இலக்கை அடைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
htts://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748587
----
(रिलीज़ आईडी: 1748667)
आगंतुक पटल : 201