வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு இடையில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை
Posted On:
20 AUG 2021 3:00PM by PIB Chennai
கொவிட்-19 2ம் அலை கட்டுப்பாட்டுக்கு இடையில், 2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், கடந்தாண்டு இதே காலத்தை விட இந்தியா 44.3 சதவீத வளர்ச்சி கண்டது.
கடந்த 2020-21ம் நிதியாண்டு முதலே, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கிறது.
உலக வர்த்தக நிறுவனத்தின் வரைபடத்தில் கடந்த 2019ம் ஆண்டில் வேளாண் பொருட்களின் மொத்த ஏற்றுமதி 37 பில்லியன் அமெரிக்க டாலர். உலக தரவரிசை பட்டியலில், இந்தியா 9வது இடத்தில் உள்ளது.
கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில், இந்த மாபெரும் இலக்கை அடைய, வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (APEDA) உதவியது.
பல்வேறு நாடுகளில் இது கண்காட்சிகளை நடத்தியது, புதிய சந்தைகளை பிடிப்பதில் இந்திய தூதரகங்களை ஈடுபடுத்தியது போன்ற ‘அபெடா’வின் முயற்சிகளால் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி கண்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747579
*****************
(Release ID: 1747646)
Visitor Counter : 221