ஜல்சக்தி அமைச்சகம்
நகர்ப்புற ஆறுகள் குறித்த ஆய்வறிக்கை போட்டியின் வெற்றியாளர்களை நியுவாவுடன் இணைந்து நமாமி கங்கே அறிவித்தது
Posted On:
19 AUG 2021 7:33PM by PIB Chennai
பல புதுமையான அம்சங்கள் கொண்ட ஒருங்கிணைந்த திட்டமான நமாமி கங்கே, ஆறுகள் சீரமைப்பில் புதிய யோசனைகள் மற்றும் பார்வைகளை பெறுவதற்காக கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்று தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு ரஞ்சன் மிஸ்ரா கூறினார்.
பல்வேறு கோணங்களில் சிந்தித்து புதிய திட்டமிடுதல் யோசனைகளை வழங்கக்கூடிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிஞர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதற்காக நகர்ப்புற ஆறுகளை மறுகற்பனை செய்தல் எனும் தேசிய அளவிலான ஆய்வறிக்கை போட்டி நடத்தப்பட்டதென்று அவர் கூறினார்.
இத்தகைய யோசனைகளை முறைப்படுத்துவதற்காக ஆற்றோர நகரங்கள் கூட்டணியை உருவாக்கும் யோசனையை அவர் முன்வைத்தார்.
சிறப்புரை ஆற்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு துர்கா சங்கர் மிஸ்ரா, நகரப் பகுதிகளில் ஆற்று சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். சபர்மதி ஆற்று பகுதியின் வெற்றியையும் இந்தோரை நீர்மிகை மாநிலமாக ஆக்கியதையும் குறிப்பிட்ட அவர், “பல ஆண்டுகளாக நாம் திட்டமிட்ட வளர்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது,” என்றார்.
மேலும் பேசிய அவர், “உங்கள் திட்டங்களின் வளர்ச்சிக்காக நீங்கள் இனிமேல் அரசாங்கத்தை சார்ந்திருக்க வேண்டியதில்லை. அவற்றை வெற்றியடைய வைக்கக்கூடிய வல்லமை உங்களிடமே இருக்கிறது,” என்றார்.
நகர்ப்புற ஆறுகள் குறித்த ஆய்வறிக்கை போட்டியின் வெற்றியாளர்களை நகர்ப்புற விவகாரங்களுக்கான தேசிய நிறுவனத்துடன் (நியுவா) இணைந்து நமாமி கங்கே இன்று அறிவித்தது ஆய்வறிக்கை போட்டியின் இரண்டாவது கட்டம் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்டது. ‘ஆற்று மாசை குறைத்தல்’, ‘நீர்நிலைகளை தூய்மைப் படுத்துதல்’, ‘துடிப்புமிக்க ஆற்று பகுதியை உருவாக்குதல்’, ‘ஆறு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குதல்’ மற்றும் ‘ஆற்று மேலாண்மை நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்துதல்’ ஆகியவை இந்த வருடத்திற்கான மையக்கருக்கள் ஆகும்.
urvers@niua.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ஆய்வறிக்கைகளை அனுப்பி வைக்கலாம். அனுப்புவதற்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 26 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747463
*****************
(Release ID: 1747505)
Visitor Counter : 277