தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை பெற பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் யுஎஸ்ஓஎப் ஒப்பந்தம்

प्रविष्टि तिथि: 18 AUG 2021 6:04PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை பெறுவதற்கு, ‘யுனிவர்ஷல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் ஃபண்ட்(யுஎஸ்ஓஎப்) பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம்  அகர்தலாவுக்கு இன்டர்நெட் இணைப்புக்கு    10 ஜிபிபிஎஸ் சர்வதேச அலைவரிசை, காக்ஸ் பஜார் வழியாக வங்கதேசத்தின் பிஎஸ்சிசிஎல் (வங்கதேச நீர்மூழ்கி கேபிள் நிறுவனம் ) நிறுவனத்திடமிருந்து வாடகை அடிப்படையில் பெறப்படுகிறது

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மேற்கண்ட சர்வதேச அலைவரிசையை, 3 ஆண்டுகளுக்கு  வாடகைக்கு பெற, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு, யுஎஸ்ஓஎப் நிதியுதவி அளிக்கும். இதன் மூலம் வடகிழக்கு பகுதி மக்கள் அதிவேக இன்டர்நெட் இணைப்புடன் பல -சேவைகளை பெறுவர்.

மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747050

 

----


(रिलीज़ आईडी: 1747185) आगंतुक पटल : 347
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri