பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
லடாக்கிற்கு என தனி ஐஏஎஸ்/குடிமை சேவைகள் தேர்வு மையத்தை லேயில் அமைப்பது குறித்து மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்
Posted On:
18 AUG 2021 6:00PM by PIB Chennai
லடாக்கிற்கு என தனி ஐஏஎஸ்/குடிமை சேவைகள் தேர்வு மையத்தை லேயில் அமைப்பது குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அறிவித்தார்.
லடாக்கில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியமர்த்தல் மற்றும் இதர சேவை தொடர்பான விஷயங்கள் குறித்து வடக்கு பிளாக்கில் உள்ள பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் தலைமையகத்தில் மத்திய அமைச்சரை லடாக் துணைநிலை ஆளுநர் திரு ஆர் கே சிங் இன்று சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கூட்டத்திற்கு பின்பு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல் குறிப்பில், இந்த வருடம் அக்டோபர் 10 அன்று நடைபெறவுள்ள குடிமை சேவைகள் (அடிப்படை) தேர்வு, 2021-க்காக முதல் முறையாக லேயில் தேர்வு மையத்தை மத்திய பணியாளர் தேர்வாணையம் அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. நாட்டின் இதர பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை சென்றடைவதில் சிரமங்களை சந்தித்துவரும் லடாக் இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த நடவடிக்கை பூர்த்தி செய்யும்.
வடகிழக்கு பகுதியில் பணிபுரியும் அனைத்திந்திய சேவைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு படிகள் லடாக் யூனியன் பிரதேசத்தில் பணிபுரியும் அனைத்திந்திய சேவைகள் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என்றும் இதற்கான உத்தரவு 2021 ஏப்ரல் 12 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747044
----
(Release ID: 1747160)