நிதி அமைச்சகம்

தங்க இறக்குமதிகளுக்கான சர்வதேச புல்லியன் சந்தை அறிமுகம்

Posted On: 18 AUG 2021 4:43PM by PIB Chennai

தங்க இறக்குமதிகளுக்கான சர்வதேச புல்லியன் சந்தையின் சோதனை ஓட்டத்தை சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையத்தின் தலைவர் திரு இன்ஜெட்டி ஸ்ரீநிவாஸ் இன்று தொடங்கி வைத்தார். சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையத்தின் நிறுவன தினமான 2021 அக்டோபர் 1 அன்று தனது சேவைகளை இந்நிறுவனம் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் தங்க இறக்குமதிகளுக்கான நுழைவாயிலாக விளங்கவிருக்கும் சர்வதேச புல்லியன் சந்தை மூலம் உள்நாட்டு நுகர்வுக்கான அனைத்து தங்க இறக்குமதிகளும் முறைப்படுத்தப்படும். இதன் மூலம் அனைத்து சந்தை பங்கேற்பாளர்களும் பொதுவான மற்றும் வெளிப்படையான தளத்தின் கீழ் வந்து, சிறப்பான விலை, தரம் மற்றும் நிதி சந்தைகளின் இதர பிரிவுகளுடன் அதிகளவிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு வழிவகுத்து, உலகின் வலிமைமிக்க வர்த்தக மையமாக இந்தியாவின் இடத்தை நிலைநிறுத்தும்.

இந்திய இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் ஐஎஃப்எஸ்சி லிமிடெட்”-டின் வாயிலாக சர்வதேச புல்லியன் சந்தையை நிறுவுவதற்கான விண்ணப்பத்திற்கு சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746963

                                                                                     ----

 



(Release ID: 1747095) Visitor Counter : 315


Read this release in: English , Urdu , Hindi , Marathi