குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லே-லடாக் பகுதியில் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் மூங்கில் சோலை திட்டம்

Posted On: 18 AUG 2021 3:10PM by PIB Chennai

வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையாக, லே-லடாக் பகுதியின் தரிசு நிலங்களில்  முதல் முறையாக மூங்கில் கன்றுகளை நடும் திட்டத்தை, காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் இன்று தொடங்கியதுகாதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம், லே-லடாக் வனத்துறை மற்றும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன்  கூட்டாக இணைந்து, லே பகுதியில் சுச்சாட் கிராமத்தில், இதுவரை பயன்படுத்தப்படாமல் இருந்த 2.50 லட்சம் சதுர அடி தரிசு நிலத்தில், 1000 மூங்கில் கன்றுகளை  நட்டதுஇத்திட்டத்தை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா, உள்ளூர் கவுன்சிலர்கள், கிராமத் தலைவர் மற்றும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்

இது குறித்து திரு சக்சேனா கூறியதாவது:

லே பகுதியில் மூங்கில் கன்று நடும் பரிசோதனை, வித்தியாசமான நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் சவாலான பணி. லே பகுதியில், மிகப் பரந்தளவிலான நிலம், பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியின் கருப்பு மண் பல இடங்களில் பாறையாக மாறிவிட்டது. இதனால் இங்கு மூங்கில் கன்று நடுவது சவாலான பணி. பாறைகளை தோண்டி மண்ணாக்கி, மூங்கில் கன்று நடப்படுகிறது. மழைக் காலத்தை தேர்ந்தெடுத்து, லே பகுதியில் மூங்கில் கன்று நடப்பட்டுள்ளது. இது வேர் பிடிப்பதற்கு சரியான நேரம் மற்றும் வரும் மாதங்களில் பனியை சமாளித்து, இந்த மூங்கில் கன்றுகள் வளர வேண்டும்.

50 முதல் 60 சதவீத மூங்கில் கன்றுகள் இங்கு வளர்ந்தால், லே-லடாக் பகுதியில் அடுத்த ஆண்டு, மூங்கில் கன்று நடும் திட்டத்தை காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளும்.

இவ்வாறு திரு வினய் குமார் சக்சேனா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746930

-----


(Release ID: 1746940) Visitor Counter : 307


Read this release in: English , Urdu , Hindi , Telugu