நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தலைநகர் பகுதியில் வருமான வரித்துறை சோதனை

Posted On: 17 AUG 2021 8:05PM by PIB Chennai

தொலைத்தொடர்பு உபகரணங்களின் விற்பனை, பொருத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்றில் 2021 ஆகஸ்ட் 16 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அதன் வெளிநாட்டு இயக்குநரின் இல்லம், நிறுவனச் செயலாளரின் இல்லம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன

மேற்கண்ட நிறுவனம் அதன் தாய் நிறுவனத்திடமிருந்தே கொள்முதல்களை முழுக்கவும் செய்திருந்தது சோதனையின் போது தெரிய வந்தது. சுமார் 30% அளவுக்கு இலாபம் இருக்கும் போதிலும் இந்தப் பொருள்களின் விற்பனை மூலம் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக வருடக்கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சட்டவிரோதப் பண பரிவர்த்தனைகள் செய்தது சோதனை செய்யப்பட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதிஅதிகாரி மற்றும் இதர முக்கிய அலுவலர்களின் வாட்ஸ்அப் உரையாடல்களிலிருந்து சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கான கமிஷன் தொகை குறித்த வாட்ஸ்அப் உரையாடல்களும் கண்டறியப்பட்டன. ஒவ்வொரு வருடமும் பல கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணப் பரிவர்த்தனை குறித்த ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. நிறுவனத்தின் பணியாளர்கள் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை அனுப்பி வைத்து பெரிய அளவில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது

ரூ.120 கோடிக்கும் அதிகமாக வரியை நிறுவனம் கழிக்காமல் விட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான செலவுகளும் சந்தேகத்திற்கிடமான வகையில் கணக்கில் காட்டப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.62 லட்சம் நிறுவன வளாகத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746775

 

-----


(Release ID: 1746807) Visitor Counter : 253


Read this release in: English , Urdu , Hindi