உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

75வது சுதந்திர தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா நாட்டு மக்களுக்கு வாழ்த்து

प्रविष्टि तिथि: 15 AUG 2021 7:48PM by PIB Chennai

நாட்டின் 75வது சுதந்திர தினத்தில், நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட தொடர் சுட்டுரைகளில் கூறியிருப்பதாவது:

‘‘இந்த மாபெரும் நாளில், நாட்டை பாதுகாத்த நமது தைரியமிக்க வீரர்கள், சுதந்திர போராட்டத்துக்காக தங்களின் அனைத்தையும்  வழங்கிய மிகச் சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். உங்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு நாட்டுக்கு சேவை செய்ய எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும்’’.

‘‘ஒரு புறம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாடு வளர்ச்சியின் புதிய உச்சத்தை தொடுகிறது மற்றொரு புறம் ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்கள்பிரதான வாழ்கையின் ஒரு பகுதியாக மாறியதில் பெருமை படுகின்றனர்விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை நாடு கொண்டாடும்போது, வாருங்கள், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா கனவை நனவாக்குவதில் இணைந்திருப்போம்’’.

செங்கோட்டையிலிருந்து பிரதமரின் பேச்சை குறிப்பிட்ட திரு அமித் ஷா கூறுகையில், ‘‘ புதிய இந்தியாவின் திறமை, வரலாற்று சீர்திருத்தங்கள் மற்றும் தீர்வுகளின் முன்னேற்றத்துடன்இந்தியாவை உலகின் முன்னணி நாடாக  மாற்ற நமது மகத்தான திறன்களை பிரதமர் திரு நரேந்திர மோடி முன்வைத்துள்ளார். அவரது உரைதற்சார்பு இந்தியாவின்  உடைக்க முடியாத உறுதியின் அடையாளமாகும்’’.

                                                                                                                                                 ------

 


(रिलीज़ आईडी: 1746199) आगंतुक पटल : 288
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi