சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் அவசரகால எதிர்வினை தயார்நிலை-II தொகுப்பு விரைந்து செயல்படுத்தப்படுகிறது

Posted On: 13 AUG 2021 6:51PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று மேலாண்மையில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் ஆதரவளிக்கிறது. இராண்டாம் அலை கிராமங்கள், புறநகர்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் பரவியதை கருத்தில் கொண்டு, ‘இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை & சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பு: பகுதி-II’ எனும் புதிய திட்டத்திற்கு 2021 ஜூலை 8 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ரூ 23,123 கோடி மதிப்பிலான இத்திட்டம் 2021 ஜூலை 1 முதல் 2022 மார்ச் 31 வரை செயல்படுத்தப்படுகிறது.

இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை & சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பு: பகுதி-II செயல்படுத்தப்படுவதை துரிதப்படுத்துவதற்காக, தயார்நிலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான 15 சதவீத முன்பணமாக ரூ 1827.80 கோடி 2021 ஜூலை 22 அன்று மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் 35 சதவீத நிதி இன்று வழங்கப்படும் நிலையில், மொத்த ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இது வரை எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது சுகாதார அமைப்பை பெருந்தொற்றுக்கு எதிராக தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில/மாவட்ட அளவில் எடுக்க முடியும்.

முன்கூட்டியே தடுத்தல், கண்டறிதல் மற்றும் மேலாண்மைக்காக சுகாதார அமைப்பை மேம்படுத்துவதை இந்த மத்திய திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அளவிடக்கூடிய விளைவுகளுடன் கூடிய குழந்தைகள் நலன் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாடு மீதும் இது கவனம் செலுத்துகிறது.

இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை & சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பு: பகுதி-II-ன் மத்திய திட்டங்களின் கீழ், ரூ 14744.49 கோடி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிதல்கள் மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745541

*****************



(Release ID: 1745588) Visitor Counter : 232