அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சில விசித்திரமான நிலைகளில் காந்தவியலின் மின்சார செயல்பாடு வினோதமான ஒளியியல் விளைவுகளுக்கு வழிவகுக்கும்: கான்பூர் ஐஐடி குழு கண்டுபிடிப்பு
Posted On:
12 AUG 2021 2:44PM by PIB Chennai
சில விசித்திரமான நிலைகளில் காந்தவியலின் மின்சார செயல்பாடு, வினோதமான ஒளியியல் விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனவும், ஒளியியல் கருவிகளில் இவை பயனுள்ளதாக உள்ளன என்றும் கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு மின் புலத்தைப் பயன்படுத்தும் போது, ‘ஆன்டிஃபெரோ மேக்னடிக் ஆக்சியன் இன்சுலேட்டர்’ எனப்படும் ஒரு சிறப்பு வகையான காந்த இன்சுலேட்டரின் மேல் மற்றும் கீழ் அடுக்குகளிலிருந்து எலக்ட்ரான்கள் தன்னிச்சையாக எதிர் திசைகளில் விலகுவதை கான்பூர் ஐஐடி குழுவினர் கண்டுபிடித்தனர்.
‘ஹால் லேயர் விளைவு’ என்று அழைக்கப்படும் இந்த அம்சம், அடுத்த தலைமுறை காந்த மற்றும் ஒளியியல் சாதனங்களில் முக்கியமான பயன்பாடுகளுடன் காந்தவியலின் மின்சார செயல்பாட்டுக்கு வழிவகுக்கும் வெளிப்புற மின் புலத்தால் அத்தகைய பொருட்களின் காந்தவியலை திறம்பட கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
மாங்கனீசு பிஸ்மத் டெல்லுரைடு எம்என்பிஐ2டிஇ4 அடுக்குகளால் செய்யப்பட்ட சில நானோமீட்டர் தடிமனான சாதனங்களில், இந்த ‘ஹால் லேயர் விளைவு ஏற்பட்டது கான்பூர் ஐஐடி குழுவினரை ஆச்சரியப்படுத்தியது. ஹால் லேயர் விளைவு என்பது ஒரு மின்சார புலத்தில், குறுக்கு மின்னழுத்தத்தை உருவாக்குவதைக் குறிக்கிறது. இது ஒரு காந்தப்புலத்தின் முன்னிலையில் உள்ள பொருட்களில் நிகழ்கிறது. ‘நேச்சர்’ என்ற இதழில் வெளியான கட்டுரையில் இந்த கண்டுபிடிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுவித ‘ஹால் லேயர் விளைவை’ பேராசிரியர் அமித் அகர்வால் தலைமையிலான கான்பூர் ஐஐடி குழுவினர் கண்டுபிடித்தனர்.
ஆய்வு கட்டுரை வெளியீட்டு இணைப்பு: :https://doi.org/10.1038/s41586-021-03679-w
இது தொடர்பான விவரங்களுக்கு , பேராசிரியர் அமித் அகர்வாலை, (amitag@iitk.ac.in) என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745113
-----
(Release ID: 1745237)
Visitor Counter : 207