தேர்தல் ஆணையம்

தெற்காசிய தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கான மன்றத்தின் 11-வது வருடாந்திர கூட்டத்தை தலைமை தேர்தல் ஆணையர் தொடங்கி வைத்தார்

Posted On: 11 AUG 2021 6:45PM by PIB Chennai

தெற்காசிய தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கான மன்றத்தின் (ஃபெம்போசா) 11-வது வருடாந்திர கூட்டத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையரும் ஃபெம்போசாவின் தற்போதைய தலைவருமான திரு சுஷில் சந்திரா தொடங்கி வைத்தார். தேர்தல் ஆணையர்கள் திரு ராஜீவ் குமார் மற்றும் திரு சி பாண்டே ஆகியோர் உடனிருந்தனர்.

காணொலி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தை பூடான் தேர்தல் ஆணையம் நடத்தியது. நாள் முழுவதும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டன.

ஃபெம்போசாவின் தலைவர் பதவியை நிறைவு செய்யும் திரு சுஷில் சந்திரா, பூடான் தலைமை தேர்தல் ஆணையர் மேன்மைமிகு டாஷோ சோனம் டோப்கேவுக்கு தலைவர் பொறுப்பை காணொலி மூலம் ஒப்படைத்தார். பூடானுக்கான இந்திய தூதர் மேன்மைமிகு மேஜர் ஜெனரல் வெட்சாப் நம்கியால் ஃபெம்போசா முத்திரையை திரு சுஷில் சந்திராவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில் பேசிய திரு சுஷில் சந்திரா, ஜனநாயக உலகின் பெரும்பகுதியை ஃபெம்போசா பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும், தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் துடிப்புமிக்க சங்கமாக செயல்படுவதாகவும் கூறினார். வெளிப்படைத்தன்மை, நடுநிலை, ஜனநாயகம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை தங்க முத்துக்களுடன் கூடிய அதன் முத்திரை குறிக்கிறது.

தேர்தலில் தொழில்நுட்பத்தின் பயன்பாடுஎன்பதே இன்றைய கூட்டத்தின் மையக்கருவாகும். வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில்நுட்பத்தோடு இணைந்து பல்வேறு செயல்முறைகளை இந்திய தேர்தல் ஆணையம் டிஜிட்டல் மயமாக்கி உள்ளதாக திரு சுஷில் சந்திரா குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744893

----



(Release ID: 1744930) Visitor Counter : 206


Read this release in: English , Urdu , Hindi , Telugu