சுற்றுலா அமைச்சகம்

வருடம் முழுவதும் சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய இடமாக இந்தியாவை முன்னிறுத்துவதற்காக சாகச சுற்றுலாவுக்கு அங்கீகாரம்: அமைச்சர் திரு கிஷன் ரெட்டி

Posted On: 10 AUG 2021 5:47PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுற்றுலா அமைச்சர் திரு கிஷன் ரெட்டி கீழ்காணும் தகவல்களை அளித்தார்

சாகச சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலா மேம்பாடு, சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை அதிகரித்தல், சாகச சுற்றுலாவுக்கான புதிய இடங்களை அங்கீகரித்தல் ஆகியவை மாநில அரசுகளின் பொறுப்பு என்றாலும், வருடம் முழுவதும் சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய இடமாக இந்தியாவை முன்னிறுத்துவதற்காக சாகச சுற்றுலாவுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

சாகச சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி அளிப்பதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ள மத்திய சுற்றுலா அமைச்சகம், சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநில/யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய நிதியுதவியையும் வழங்குகிறது

வியக்கத்தக்க இந்தியா (இன்கிரெடிபிள் இந்தியா) சுற்றுலா ஏற்பாட்டாளர்/ சுற்றுலா வழிகாட்டிக்கான சான்றிதழ் திட்டத்தை மத்திய சுற்றுலா அமைச்சகம் தொடங்கியுள்ளது.

அடிப்படை மற்றும் முன்னேறிய (இன்கிரெடிபிள் இந்தியச் சுற்றுலா ஏற்பாட்டாளர் - பாரம்பரியம் மற்றும் சாகசம்) பயிற்சி, மொழிப் பயிற்சி மற்றும் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் முறையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும், டச்சு, ஜெர்மன், பிரஞ்சு, ஜப்பானிய, சீன மொழிகள் உள்ளிட்டவற்றில் ஆறு வார மொழிப் பயிற்சியை சுற்றுலா அமைச்சகம் வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744489

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744491

 

                                                                         ------



(Release ID: 1744577) Visitor Counter : 232


Read this release in: English , Urdu , Telugu