உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

சிறு அளவிலான உணவுப் பதப்படுத்தல் மையங்களை பண்ணைகளில் அமைத்தல்

Posted On: 06 AUG 2021 1:56PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உணவுப் பதப்படுத்தல் தொழில்கள் இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார். 

உணவுப் பதப்படுத்தல் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பிரதமரின் விவசாயிகள் சம்பதா யோஜனா எனும் முன்னணி திட்டத்தை உணவுப் பதப்படுத்தல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஆரம்ப பதப்படுத்தல் வசதிகள் மற்றும் சேமிப்பு மையங்கள் ஆகியவற்றை பண்ணை அளவில் நிறுவுவதற்கு தேவையான நிதியுதவி தொழில்முனைவோருக்கு வழங்கப்படுகிறது. 292 உணவுப் பதப்படுத்தல் மையங்களுக்கு உதவி அளிப்பதற்கு இதுவரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2008-ம் ஆண்டு முதல் மிகப்பெரிய உணவு பூங்கா திட்டத்தை உணவுப் பதப்படுத்தல் அமைச்சகம் செயல்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் முன்னணி திட்டமான பிரதமரின் விவசாயிகள் சம்பதா யோஜனாவின் கீழ் இது தற்போது செயல்படுத்தப்படுகிறது.

உணவுப் பதப்படுத்தலுக்குத் தேவையான நவீன உள்கட்டமைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். 38 மிகப்பெரிய உணவு பூங்காக்களுக்கு இறுதி ஒப்புதலையும், மூன்று மிகப்பெரிய உணவு பூங்காக்களுக்கு ஆரம்பகட்ட ஒப்புதலையும் உணவுப் பதப்படுத்தல் அமைச்சகம் இதுவரை வழங்கியுள்ளது.

இவற்றில் 22 மிகப்பெரிய உணவு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன மற்றும் 19 மிகப்பெரிய உணவு பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மிகப்பெரிய உணவு பூங்காவின் சராசரி திட்ட மதிப்பு ரூ 110.92 கோடியாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743106

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743104

*****************



(Release ID: 1743370) Visitor Counter : 151