தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
அகில இந்திய வானொலியை விரும்பி கேட்கும் நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்தை ஃபிஜி பின்னுக்கு தள்ளியுள்ளது, முதல் 10 இடங்களில் தமிழ் சேவை மீண்டும் இடம் பிடித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2021 2:38PM by PIB Chennai
நியூஸ் ஆன் ஏர் செயலியில் ஒலிபரப்பாகும் அகில இந்திய வானொலி நேரலைகளை அதிகமாக கேட்கும் நாடுகளின் (இந்தியாவை தவிர்த்து) சமீபத்திய பட்டியலில், இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ஃபிஜி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.
அகில இந்திய வானொலி நிலையங்களை பொருத்தவரை, முதல் 10 இடங்களில் தமிழ் சேவை மீண்டும் இடம் பிடித்துள்ளது. அகில இந்திய வானொலி கொச்சி எஃப் எம் முதல் 10 இடங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அகில இந்திய வானொலி கொடைக்கானல் ஆறாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது இடத்திற்கு சென்றுள்ளது.
அகில இந்திய வானொலி செய்திகள் 24*7 சர்வதேச பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ள நிலையில், முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளில் விவித் பாரதி தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர், இருநூற்று நாற்பதுக்கும் அதிகமான வானொலி சேவைகளை நேரலையில் ஒலிபரப்புகிறது. உலகெங்கிலும் உள்ள 85 நாடுகளில் இருக்கும் 8,000 நகரங்களிலிருந்து நேயர்கள் நிகழ்ச்சிகளைக் கேட்கிறார்கள்.
சமீபத்திய தரவரிசை பட்டியல் 2021 ஜூலை 16 முதல் ஜூலை 30 வரையிலான இருவாரங்களுக்கு உரியதாகும். இந்தியா இதில் சேர்க்கப்படவில்லை.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743148
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1743355)
வருகையாளர் எண்ணிக்கை : 229