சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 51.16 கோடிக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் விநியோகம்

Posted On: 06 AUG 2021 10:19AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 51.16 கோடிக்கும் அதிகமான (51,16,46,830) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும், கூடுதலாக 20,49,220 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 49,19,73,961 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 2.30 கோடி (2,30,03,211)) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743044

*****

(Release ID: 1743044)



(Release ID: 1743073) Visitor Counter : 257