பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

சிறப்பான செயல்திறன், வெளிப்படைத்தன்மை மிக்க மற்றும் ஊழலற்ற ஆட்சிமுறை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நிர்வாக சீர்திருத்தங்கள் நோக்கமாக கொண்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 05 AUG 2021 3:58PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.  

நிர்வாக சீர்திருத்தங்கள் ஒரு தொடர் நடவடிக்கை ஆகும். ‘குறைந்தபட்ச அரசு - அதிகபட்ச ஆளுகைஎனும் கொள்கையை அரசு பின்பற்றுகிறது.

சிறப்பான செயல்திறன், வெளிப்படைத்தன்மை மிக்க மற்றும் ஊழலற்ற ஆட்சிமுறை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நிர்வாக சீர்திருத்தங்கள் நோக்கமாக கொண்டுள்ளன. சில முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

1. கர்ம யோகி இயக்கம்: திறன்மிகு பொது சேவை வழங்கலை அனைத்து விதங்களிலும் மேம்படுத்தும் விதத்தில் குடிமை பணிகள் திறன் வளர்த்தலுக்கான தேசிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

2. -சமிக்‌ஷா: அரசு முடிவுகளை தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணிப்பதற்கான ஆன்லைன் முறை.

3. -அலுவலகம்: காகிதமில்லா அலுவலக முறை மற்றும் சிறப்பான முடிவெடுத்தலை அமைச்சகங்கள்/துறைகளில் ஊக்குவிப்பதற்கான திட்டம்.

4. மக்கள் சாசனங்கள்: அனைத்து அமைச்சகங்கள்/துறைகளில் மக்கள் சாசனங்களை கட்டாயமாக்கி உள்ள அரசு, தொடர்ந்து அதை ஆய்வு செய்து வருகிறது. இது குறித்த தகவல்களை  https://goicharters.nic.in/public/website/home எனும் முகவரியில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742751

----(Release ID: 1742910) Visitor Counter : 239


Read this release in: English , Hindi , Punjabi