மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சர்வதேச தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள்

Posted On: 05 AUG 2021 4:14PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கீழ்காணும் தகவல்களை அளித்தார்

நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் உலகத் தரத்தை எட்டுவதற்காக அவற்றுக்கு அதிகாரமளிப்பதற்கு இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நோக்கத்தில் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகத் தர கல்வி நிறுவனங்கள் திட்டம், அரசு மற்றும் தனியார் துறையில் இருந்து தலா 10 கல்வி நிறுவனங்களில் உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை ஏற்படுத்தி அவற்றுக்கு உயர்சிறப்பு நிறுவன அந்தஸ்து வழங்குவதை நோக்கமாக கொண்டது ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் 12 (8 அரசு மற்றும் 4 தனியார்) நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறையை சேர்ந்த உயர்சிறப்பு நிறுவனங்களுக்கு ஐந்து வருடங்களில் தலா ரூ 1000 கோடி வரை இந்திய அரசு நிதியுதவியாக வழங்குகிறது

பல்முனை கல்வி அணுகலை ஊக்குவிக்கும் விதமாக டிஜிட்டல்/ஆன்லைன்/தொலைக்காட்சி-வானொலி கல்வி தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக 2020 மே 17 அன்று பிரதமரின் இவித்யா எனும் விரிவான திட்டம் தொடங்கப்பட்டது.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளி கல்வி முறைக்கு தரமான இணைய-உள்ளடக்கத்தை வழங்குவதற்கான தேசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பாக திக்‌ஷா விளங்குகிறது. அனைத்து வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அதில் கிடைக்கும்.

ஒன்று முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வகுப்புக்கு ஒரு ஸ்வயம் பிரபா தொலைக்காட்சி அலைவரிசை செயல்படுகிறது. வானொலி, சமூக வானொலி மற்றும் சிபிஎஸ்இ போட்காஸ்ட் ஆகியவை விரிவாக பயன்படுத்தப்படுகிறது. பார்க்கும் மற்றும் கேட்கும் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு இணைய பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய வழிகாட்டு மையங்களை உருவாக்குதல், ஏற்கனவே உள்ள வழிகாட்டு மையங்களை மேம்படுத்துதல் மற்றும் பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்களை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் புதுமைகள் நிறைந்த தொழில்முனைதல் சூழலியலை உருவாக்குவதற்கான இந்திய அரசின் முயற்சியாக அடல் புதுமைகள் இயக்கம் அமைந்துள்ளது.

இது வரை, 876 பள்ளிகளுக்கு அடல் டிங்கரிங் ஆய்வகங்களுக்கான ஒப்புதலும் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல், தொலைபேசி, சமுக ஊடகம், அடல் டிங்கரிங் ஆய்வக பணிப்பலகை மற்றும் கேள்விகளுக்கு தீர்வளிக்கும் தளம் ஆகிய பல்வேறு வழிகளின் வாயிலாக அடல் டிங்கரிங் ஆய்வகங்களுடன் அடல் புதுமைகள் இயக்கம் நெருங்கி பணியாற்றி வருகிறது. மொத்தம் ரூ 20,00,000 நிதியுதவியாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742765

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742766

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742764

                                                                                     -----



(Release ID: 1742900) Visitor Counter : 107


Read this release in: English , Marathi , Punjabi