அணுசக்தி அமைச்சகம்
நாட்டின் எரிசக்தி உற்பத்தியில் அணுசக்தியின் பங்கு 2020-21 நிலவரப்படி 3.1 சதவிகிதமாக உள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிந்தேந்தர் சிங் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
04 AUG 2021 4:32PM by PIB Chennai
நாட்டின் எரிசக்தி உற்பத்தியில் அணுசக்தியின் பங்கு 2020-21 நிலவரப்படி, 3.1 சதவிகிதமாக உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு), மத்திய பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் திரு.ஜித்தேந்தர் சிங் கூறினார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில் அவர் கூறும்போது, நாட்டின் எரிசக்தி உற்பத்தியில் அணு சக்தியின் பங்கை அதிகரிக்கும் விதத்தில், பெரிய அளவில் அணுசக்தி உற்பத்தி அதிகரிப்பு திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது என்றார். மேலும் அவர், அடுத்து வரும் காலகட்டங்களில் கூடுதல் அணு மின் நிலையங்கள் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம், வரும் 2030-க்குள் நாட்டின் அணுசக்தி திறன் தற்போதுள்ள 6780 மெகாவாட்டிலிருந்து 22480 மெகாவாட்டாக அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.
நாட்டில் 22 அணு உலைகளில் 6780 மெகா வாட் உற்பத்தி திறன் உள்ளது, இதில் 700 மெகா வாட் திறன் கொண்ட கேஏபிபி-3 (KAPP-3) அணு உலை மட்டும் ஜனவரி 10, 2021 முதல் மின்சார கிரிட்டுடன் (grid) இணைக்கப்பட்டுள்ளது. 8000 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742305
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1742470)
வருகையாளர் எண்ணிக்கை : 189