வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வேளாண் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்துடன் அபேடா புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 04 AUG 2021 3:52PM by PIB Chennai

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதிகளை, குறிப்பாக கர்நாடகாவில், ஊக்குவிப்பதற்காக பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்துடன்

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் (அபேடா) கையெழுத்திட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குதல், தரமான ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்காக திறன்மிகு மற்றும் துல்லிய விவசாயத்தை ஊக்குவித்தல், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், 2018-ல் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட வேளாண் ஏற்றுமதி கொள்கையின் கீழ் கர்நாடகாவில் இருந்து செய்யப்படும் வேளாண்-ஏற்றுமதிகளை அதிகரித்து இந்திய வர்த்தகப் பெயரை சர்வதேச அளவில் நிறுவுதல் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு ஏற்படும்.

வேளாண் தொழில்முனைவோரின் வளர்ச்சி, தொழில்நுட்ப முனைவோரின் திறன் வளர்த்தல், துடிப்பான திறமைகள் மேம்பாடு, குறிப்பிட்ட பொருட்களுக்கான குழுக்களை உருவாக்கி ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான கூட்டு அணுகல் முறையை கட்டமைத்தல் உள்ளிட்டவற்றிலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.

அபேடா தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து, வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு, துணை வேந்தர் டாக்டர் எஸ் ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் செயல்பாடுகளை ஒன்றிணைப்பதற்காக இணைந்து பணியாற்றி, பங்குதாரர்களுக்கு சிறப்பான மதிப்பை அளிப்பதற்காக இரு நிறுவனங்களின் நிபுணத்துவத்தை பயன்படுத்திக் கொள்வதே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742285

----


(Release ID: 1742457)
Read this release in: English , Urdu , Hindi