சுரங்கங்கள் அமைச்சகம்

அரசு நிறுவனங்களுக்கு சுரங்க குத்தகை 20 ஆண்டுகள் வரை நீட்டிப்பு: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

Posted On: 02 AUG 2021 2:58PM by PIB Chennai

அரசு நிறுவனங்களுக்கு சுரங்க குத்தகை 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுவதாக  மத்திய சுரங்கங்கள் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர்  திரு பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

அவர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

சுரங்க குத்தகைகளை புதுப்பிக்கும் வசதி இல்லை. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை (MMDR) சட்டம், 1957-ன்படியும் மற்றும் எம்எம்டிஆர் சட்ட திருத்தம் 2015 அமல் ஆன தேதியிலிருந்துஎல்லா சுரங்க குத்தகையும் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. குத்தகை காலம் முடிந்ததும், எம்எம்டிஆர் சட்ட விதிமுறைகளின் கீழ் மீண்டும் குத்தகைக்கு விடப்படும்.

ஆனால், அரசு நிறுவனங்கள் மற்றும் கார்பரேஷனாக இருந்தால், ஏலம் மூலம் விடப்பட்ட குத்தகை காலம், எம்எம்டிஆர் சட்டத்தின் 5வது பிரிவுப்படி, கூடுதல் கட்டணம் செலுத்தப்பட்டு, மாநில அரசு விண்ணப்பித்த தேதியிலிருந்து 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.  

*****************(Release ID: 1741514) Visitor Counter : 39


Read this release in: English , Punjabi , Malayalam