பாதுகாப்பு அமைச்சகம்

ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் துறைமுகத்தைச் சென்றடைந்தது ஐஎன்எஸ் தபார்

Posted On: 01 AUG 2021 12:34PM by PIB Chennai

நட்பு நாடுகளுடனான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் ஐஎன்எஸ் தபார் கப்பல், ஜூலை 30-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் துறைமுகத்தைச் சென்றடைந்தது. சுமார் இரண்டு தசாப்தங்களில் இந்திய கடற்படைக் கப்பல் ஸ்டாக்ஹோம் செல்வது இதுவே முதல் முறையாகும். ஸ்வீடன் கடற்படையின் துணைத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் பெடெர் ஓல்சோன், ஸ்வீடனில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு அலுவலர் கேப்டன் பங்கஜ் மிட்டல் ஆகியோர் ஐஎன்எஸ் தபார் கப்பலுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

கப்பலுக்கு வந்த ஸ்வீடன் கடற்படையின் துணைத் தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கப்பலின் முக்கிய இயக்கங்கள் குறித்து அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது. தபார் கப்பலின் வரவினால், இந்தியா மற்றும் ஸ்வீடன் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நீண்டகால உறவு வலுவடையும் என்று அவர் தெரிவித்தார்.

ஐஎன்எஸ் தபார் கப்பலின் கமாண்டிங் அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி, ஸ்வீடன் மற்றும் லாட்வியாவிற்கான இந்திய தூதர் திரு தன்மயா லாலை சந்தித்துப் பேசினார். ஜூலை 31-ஆம் தேதி தபார் கப்பலுக்கு வருகை தந்த இந்திய தூதர், பல்வேறு துறைமுகங்களுக்கு பயணம் மேற்கொள்வதன்  வாயிலாக நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சர்வதேச உறவுகளின் மேலாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டினார்.

ஸ்டாக்ஹோம் நாட்டின் ராணுவத் தலைவர் கர்னல் தாமஸ் கார்ல்சனையும் கமாண்டிங் அதிகாரி சந்தித்துப் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741232

*****************


(Release ID: 1741271) Visitor Counter : 305


Read this release in: English , Urdu , Hindi , Punjabi