நிதி அமைச்சகம்

தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக திரு தீபக் தாஸ் பொறுப்பேற்பு

Posted On: 01 AUG 2021 10:59AM by PIB Chennai

புதிய தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக திரு தீபக் தாஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  25-வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக அவர் பணியாற்றுவார்.

நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையால் நியமிக்கப்பட்ட 1986-ஆம் ஆண்டு இந்திய குடிமைக் கணக்கு பணி தொகுப்பைச் சேர்ந்த திரு தீபக் தாஸ், இன்று (ஆகஸ்ட் 1, 2021) முதல் இந்தப் பதவியை வகிப்பார்.

தமது 35 ஆண்டுகால நெடிய பணிக்காலத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனம், தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் கனரக தொழில் துறைகள், வர்த்தகம் மற்றும் ஜவுளி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல், உள்துறை உள்ளிட்ட அமைச்சகங்களிலும், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திலும் அவர் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இந்திய குடிமைக் கணக்குப் பணியின் பயிற்சி அகாடமியான அரசு கணக்கு மற்றும் நிதி நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 

தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் முதன்மை கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக அவர் பதவி வகித்தார். திரு தீபக் தாஸ், தில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியின் முன்னாள் மாணவராவார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741212

*****************



(Release ID: 1741258) Visitor Counter : 285