அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தோட்டக்கலை பயிர்களுக்கு புதிய பாலிஹவுஸ் தொழில்நுட்பம்

Posted On: 31 JUL 2021 5:49PM by PIB Chennai

தோட்டக்கலை பயிர்களுக்கு புதிய பாலிஹவுஸ் தொழில்நுட்பத்தை, பஞ்சாப்பின் லூதியானாவில், சிஎஸ்ஐஆர்- துர்காபூர் மத்திய மெக்கானிக்கல் பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் ஹரீஷ் ஹிரானி தொடங்கி வைத்தார்.

இது இயற்கையான காற்றோட்ட வசதியுடன் கூடிய பாலிஹவுஸ். இதில் தானியங்கி முறையில் கூரையை இழுக்க முடியும். இந்த தொழில்நுட்பம் குறித்து டாக்டர் ஹிரானி கூறியதாவது:

அதிகமான குளிர், வெப்பம், மழை, காற்று மற்றும் பூச்சித் தொல்லை என பலவித பிரச்சினைகளை, தோட்டக்கலை பயிர்களை வளர்க்கும் விவசாயிகள் சந்திக்கின்றனர்.

தாவரங்கள் போதிய அளவு நீராவியை வெளியேற்றாதது, பூச்சித் தாக்குதல் போன்றவற்றாலும் 15 சதவீத அளவுக்கு பயிரிழப்பு ஏற்படுகிறது. பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இந்த பாதிப்பு அதிகம் உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு வழக்கமாக உள்ள பாலிஹவுஸ் மூலம் ஒரளவு தீர்வுக் காண முடியும். இதில் நிலையான கூரை உள்ளது. இது வானிலை முரண்பாடு மற்றும் பூச்சிகள் பாதிப்பை குறைக்கும். இந்த கூரையால் சில பாதகங்களும் ஏற்படலாம். வெப்பம் அதிகரிக்கலாம், காலையில் போதிய வெளிச்சம் கிடைக்காமல் இருக்கலாம். அதோடு, கார்பன் டை ஆக்சைடு அளவு, நீராவி வெளியேற்றுதல் போன்றவை போதிய அளவில் இல்லாமல் இருக்கலாம் மற்றும் தண்ணீர் அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் உள்ளது.  திறந்த வெளியுடன் கூடிய நிலம் மற்றும் பாலிஹவுஸ் ஆகிய இரண்டும் இருந்தால், பருவநிலை மாற்ற பிரச்சினைகளை எதிர்காலத்தில் எளிதில் சமாளிக்க முடியும்.

லூதியானாவில் உள்ள சிஎம்இஆர் விரிவாக்க மையம் கூரையை தானியங்கி முறையில் இழுக்கக்கூடிய புதிய பாலிஹவுஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது.

அனைத்து காலநிலைகளுக்கு பொருத்தமான இந்த புதிய பாலிஹவுஸ் தொழில்நுட்பத்தில் தானியங்கி முறையில் இழுக்கக்கூடிய கூரை உள்ளது. இவற்றை பிஎல்சி மென்பொருளை பயன்படுத்தி பெறப்படும் தரவுகள் மூலம் வானிலை நிலவரம் மற்றும் பயிர் தேவைகளுக்கு ஏற்ப இதைப் பயன்படுத்த முடியும்.

இவ்வாறு டாக்டர் ஹரீஷ் ஹிரானி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741062

*****************


(Release ID: 1741124) Visitor Counter : 365


Read this release in: English , Urdu , Hindi