சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் சமூக மேம்பாட்டு முகாம் : அவுரங்காபாத்தில் நாளை நடக்கிறது

Posted On: 31 JUL 2021 6:06PM by PIB Chennai

சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு  உதவி மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் சமூக மேம்பாட்டு முகாம் பீகாரின் அவுரங்காபாத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாளை நடக்கிறது. 

இதில் 1521 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 546 மூத்த குடிமக்களுக்கு  ரூ.2.43 கோடி மதிப்பில் 5102 உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

நாளை காலை 11 மணிக்கு, காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமை விருந்தினராக கலந்துக் கொள்கிறார். இத்துறை இணையமைச்சர் சுஷ்ரி பிரதிமா பெளமிக் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்.

இந்நிகழ்ச்சியை சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் யூ டியூப் தளத்தில் https://youtu.be/4pwAxtrk444Ministry of Social Justice & Empowerment காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741070

*****************



(Release ID: 1741098) Visitor Counter : 183


Read this release in: English , Urdu , Hindi , Punjabi