தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        ராக்கி கடிதங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை தபால் துறை செய்துள்ளது
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 JUL 2021 2:31PM by PIB Chennai
                
                
                
                
                
                
                ராக்கி பண்டிகை 2021 ஆகஸ்ட் 22 அன்று கொண்டாடப்படவுள்ளது. ராக்கி கடிதங்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை தபால் துறை செய்துள்ளது. 
இதர மாநிலங்களுக்கு ராக்கி தபால்களை அனுப்புவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் 2021 ஆகஸ்ட் 16 வரை செய்யப்பட்டுள்ளது என்றும், தில்லிக்குள் அனுப்புவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் 2021 ஆகஸ்ட் 17 வரை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிக்கை ஒன்றில் தில்லி வட்டத்திற்கான தலைமை தபால் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள 34 முக்கிய தபால் அலுவலகங்களிலும், 2 ஆர்எம்எஸ் அலுவலகங்களிலும் (தில்லி ரயில் நிலையம் மற்றும் புதுதில்லி ரயில் நிலையம்) சிறப்பு தபால் மையங்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் இயங்கும். 
கடைசி நிமிட கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே ராக்கிகளை அனுப்புமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740659 
***************** 
                
                
                
                
                
                (Release ID: 1740776)
                Visitor Counter : 260