நிலக்கரி அமைச்சகம்

கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிலக்கரி எடுப்பது அதிகரிப்பு

Posted On: 29 JUL 2021 11:48AM by PIB Chennai

2020-2021 நிதியாண்டின் கடைசி காலாண்டில் நாட்டில் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து மின்சார உற்பத்திக்காக நிலக்கரி எடுப்பது அதற்கு முந்தைய மூன்று காலாண்டுகளை விட அதிகரித்துள்ளது. கடந்த 2020-2021 நிதியாண்டின் நான்கு காலாண்டில் நாட்டில் நிலக்கரி எடுத்து வரப்பட்ட விபரம் பின்வருமாறு-

•        ஏப்ரல்- ஜூன் 144.343

•        ஜூலை- செப்டம்பர் 158.466

•        அக்டோபர்- டிசம்பர் 186.821

•        ஜனவரி- மார்ச் 201.258

இவை அனைத்து மில்லியன் டன்களில் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) தகவல்படி, 2020-2021 நிதியாண்டில் நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும், 2021-2022 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலக்கரி சார்ந்த மின்சார உற்பத்தி கடந்தாண்டு அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 29 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்த தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு.பிரஹலாத் ஜோஷி இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740012

*****************(Release ID: 1740402) Visitor Counter : 43


Read this release in: Bengali , English , Urdu