சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் கிரீமி லேயருக்கு ஒரே மாதிரியான விதிமுறை : மாநிலங்களவையில் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JUL 2021 3:47PM by PIB Chennai
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரில்(ஓபிசி) வசதியானவர்களுக்கான (க்ரீமிலேயர்) விதிமுறை, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியாக உள்ளது என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர்கள் சுஷ்ரி பிரதிமா பவுமிக், திரு ஏ. நாராயணசாமி ஆகியோர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
ஓபிசி பிரிவுக்கான க்ரீமி லேயர் விதிமுறை:
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரில்(ஓபிசி) வசதியானவர்களுக்கான (க்ரீமி லேயர்) விதிமுறை, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியாக உள்ளது.
இது தொடர்பாக எந்த விசாரணை விவரங்களும் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தால் (என்சிபிசி) வழங்கப்படவில்லை.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கார்பரேஷனுக்கு வழங்கப்பட்ட நிதி:
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கார்பரேஷனுக்கு கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2019-2020ம் ஆண்டில் ரூ.130 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ. 55.40 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
திருநங்கைகளுக்கான விரிவான திட்டம்:
திருநங்கைகளுக்கு, விரிவான மறுவாழ்வு அளிக்கும் வகையில், பின்தங்கிய தனிநபர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் தொழில் உதவி திட்டத்துக்கு (Support for Marginalised Individuals for Livelihood and Enterprise (SMILE) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டபின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
திருநங்கைகளின் மேம்பாடு:
திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் 2020 நவம்பர் 25ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் திருநங்கைகள் விண்ணப்பித்து, நேரடி தொடர்பு இல்லாமல் அடையாள சான்றிதழை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். திருநங்கைளின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ‘கரீமா கிரஹ்’ என்ற பெயரில் பாதுகாப்பு இல்லங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் அடிப்படை வசதிகள், உணவு, மருத்துவ வசதி, பொழுது போக்கு வசதி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சமூக திட்டங்களுக்கான தணிக்கை:
2021-22ம் ஆண்டில் தகவல்-கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் சமூக தணிக்கை (I-MESA) என்ற திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இத்துறையின் அனைத்து திட்டங்களும், இந்த நிதியாண்டில் தணிக்கை செய்யப்படும். மாநிலங்களின் சமூக தணிக்கை பிரிவுகள், மற்றும் ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய மையம் மூலம் இந்த சமூக தணிக்கைகள் செய்யப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் கண்டு பட்டியலிடும் உரிமை
அரசியல் சாசன (102வது) திருத்த சட்டம், 342-ஏ பிரிவை இந்திய அரசியல் சாசனத்தில் சேர்த்துள்ளது. இது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய பிரிவினர் (SEBCs - பொதுவாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் -ஓபிசி) தொடர்புடையது. இந்தப் பிரிவு, ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் தொடர்பான சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மத்தியப் பட்டியலை குறிப்பிட குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், இந்த ஓபிசி மத்திய பட்டியலில் எந்த மாற்றமும், நாடாளுமன்றத்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும். தங்களின் ஓபிசி பட்டியலை வெளியிட மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை. இதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் கடந்த மே 5ம் தேதி பிறப்பித்தது.
ஓபிசி பட்டியலை தீர்மானிப்பதில் மாநிலங்களின் அதிகாரத்தை காப்பதற்கான வழிகள் குறித்து சட்ட நிபுணர்கள், சட்ட அமைச்சகத்துடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739898
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739896
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739895
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739901
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739891
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739890
------
(வெளியீட்டு அடையாள எண்: 1740037)
வருகையாளர் எண்ணிக்கை : 328