சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதாரத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கைகள்: மாநிலங்களவையில் டாக்டர் பாரதி பிரவீன் பவார் தகவல்

Posted On: 27 JUL 2021 3:46PM by PIB Chennai

சுகாதாரத்துறையை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டதாகமாநிலங்களவையில் டாக்டர் பாரதி பிரவீன் பவார்  தெரிவித்தார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த அறிக்கையில் கூறியதாவது:

கொவிட்-19 பாதிப்பு காலத்தில் சுகாதார கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த தேவையான தொழில்நுட்ப, பொருட்கள மற்றும் நிதியுதவிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

* இஎஸ்ஐசி, ராணுவம், ரயில்வே, துணை ராணுவப்படைகள், எஃகு அமைச்சகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு உதவியதுமேலும், நாட்டில் கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பை சமாளிக்க, தற்காலிக மருத்துவமனைகளை டிஆர்டிஓ ஏற்படுத்தி கொடுத்தது

* கொவிட் முதல் ஊரடங்குக்கு(2020 மார்ச் 23) முன்பு 10,180 மற்றும் 2,168 என்ற எண்ணிக்கையில் இருந்த தனிமைப் படுக்கைகள் மற்றும் ஐசியு படுக்கைகள், தற்போது  18,21,845 மற்றும் 1,22,035 என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

* 2020 ஆகஸ்ட்டில் நாள் ஒன்றுக்கு 5,700 மெட்ரிக் டன்னாக இருந்த மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி, கடந்த மே 13ம் தேதி நிலவரப்படி, 9690 மெட்ரிக் டன்களாக அதிகரிக்கப்பட்டது.

* ரெம்டெசிவர் மருந்து உற்பத்தி திறன் மாதம் ஒன்றுக்கு 38 லட்சம் குப்பிகள் என்ற அளவில் இருந்து 122 லட்சம் குப்பிகளாக அதிகரிக்கப்பட்டன.

* கொவிட் 19 தொற்றைக் கட்டுப்படுத்த 2019-20ம் நிதியாண்டில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு  ரூ. 1113.21  கோடி வழங்கப்பட்டதுஇதன் விவரங்கள் இணைப்பு-1-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய உறுப்பு மாற்றுத் திட்டம் (NOTP):

தேசிய உறுப்பு மாற்றுத் திட்டத்தின் கீழ், தேசிய அளவிலான திசு வங்கி புதுதில்லியில் உள்ள தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO)-ல் உருவாக்கப்பட்டது.   மேலும், தேசிய உறுப்பு மாற்றுத் திட்டத்தின் கீழ் திசு மையம் அமைக்க மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறதுதற்போதுபிராந்திய திசு மற்றும் உறுப்பு மாற்று அமைப்பு (ROTTO) சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதுதிசு மையம் அமைக்க பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள்:

கடந்த 2018ம் ஆண்டில் 13.25 லட்சமாக இருந்த புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை, 2020ம் ஆண்டில் 13.92 லட்சமாக அதிகரித்ததாக தேசிய புற்றுநோய் பதிவு அறிக்கை 2020-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நாட்டின் பல பகுதிகளில் உள்ள புற்றுநோய் சிகிச்சை கிளை மையங்களில் வசதிகளை அதிகரிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 19 மாநில புற்றுநோய் சிசிச்சை மையங்கள், 20 புற்றுநோய் சிகிச்சை கிளை மையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

கொவிட் நோயாளிகளிடம் புகையிலை பாதிப்பை மதிப்பிட ஆய்வு:

அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் புகையிலை பயன்பாடு மற்றும் கொவிட்-19 பாதிப்புக் குறித்து உலக சுகாதார நிறுவனம்  கடந்த 2020ம் ஆண்டு மே 11ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், ‘‘கொவிட்-19 தொற்று மற்றும் இந்தியாவில் புகையிலைப் பயன்பாடு’’ தொடர்பான அறிவுறுத்தலை  கடந்த 2020 ஜூலை 28ம் தேதி வெளியிட்டதுஅதை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.

https://www.mohfw.gov.in/pdf/COVID19PandemicandTobaccoUseinIndia.pdf .

* புகையிலை நுகர்வைத் தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நிமோனியா புதிய கொள்கை:

நிமோனியா, 16.9 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக உள்ளது. நிமோனியா காரணமாக குழந்தைப் பருவ இறப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்க  சமூக விழிப்புணர்வு மற்றும் நிமோனியாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் (SAANS) கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது

* அதன்படி குழந்தைப் பருவத்தில் ஏற்படும் நிமோனியாவுக்கு, அமாக்சிலின் பயன்பாடு அறிமுகம் உட்பட  சிகிச்சை மற்றும் மேலாண்மை வழிகாட்டுதல்கள்  வெளியிடப்பட்டன.

* நிமோனியாவை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நிறுவனங்களின் திறன் அதிகரிக்கப்பட்டன

* குழந்தைப் பருவ நிமோனியா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் தொடர்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

 

தீவிர கொவிட்-19 மேலாண்மைக்கு, சுகாதார வசதிகள் மேம்பாடு:

இந்தியா கொவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை நிதியுதவி திட்டம்-2-ன்படி ரூ.23,124 கோடி மதிப்பிலானத் திட்டத்தை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.15,000 கோடி மாநிலங்களின் பங்கு ரூ.8,123 கோடி. இத்திட்டம் 2021 ஜூலை 1ம் தேதி முதல் 2022 மார்ச் 31ம் தேதி வரை அமல்படுத்தப்படவுள்ளது. இதில் ஊரகப் பகுதிகள், பழங்குடியினப் பகுதிகள் மற்றும் தொலை தூரப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளின் வசதிகளை அதிகரிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவி அளிக்கப்படும்.

ஆஷா ஊழியர்களின் நலன்:

கொரோனா தொற்று காலத்தில் ஆஷா ஊழியர்கள் தங்கள் வழக்கமானப் பணிகளில் ஈடுபடுவதற்கு ரூ.2000 ஊக்கத் தொகை அளிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன. ஜனனி சுரக்‌ஷா திட்டம் , பச்சிளம் குழந்தை கவனிப்பு திட்டம் போன்றவற்றுக்கும் ஊக்கத் தொகைகள் வழங்குவதைத் தொடர வேண்டும் எனவும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739455

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739456

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739457

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739458

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739459

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739460

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739461

 

-----



(Release ID: 1739605) Visitor Counter : 247


Read this release in: English , Punjabi , Telugu