அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அழியும் நட்சத்திரத்தில் வெளிப்படும், முதல் குறுகிய கால காமா-கதிர் வெடிப்பை கண்டறிந்தனர் இந்திய வானவியலாளர்கள்

Posted On: 27 JUL 2021 12:39PM by PIB Chennai

அழியும் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும், முதல்  மிக குறுகிய கால, சக்திவாய்ந்த காமா காதிர் வெடிப்பை இந்திய வானியலாளர்கள் குழு கண்டறிந்தது. ஒரு வினாடி நேரம் நீடித்த இந்த வெடிப்பால், ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த காமா கதிரியக்கம் பூமியை நோக்கி வந்தது. மிகப்பெரிய நட்சத்திரம் அழியும்போது ஏற்பட்ட காமா-கதிர் வெடிப்பை, நாசாவின் ஃபெர்மி காமா-கதிர் விண்வெளி தொலைநோக்கி, கடந்த 2020, ஆகஸ்ட் 26ம் தேதி கண்டுபிடித்ததுதான், மிகக் குறுகிய கால காமா கதிர் வெடிப்பாக ஆவணப்பதிவுகளில் இடம்பெற்றிருந்தது. 

காமா கதிர் வெடிப்புகள், இந்த பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகளில் கண்டறியக்கூடிய  மிக சக்திவாய்ந்த நிகழ்வுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குறுகிய கால காமா கதிர் வெடிப்பைஅறிவில் மற்றும் தொழில்நுட்பத்துறையின், ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி டாக்டர் சசி பூஷன் பாண்டே, உட்பட உலகின் பல விஞ்ஞானிகள் கண்டனர். இதுஅழியும் நட்சத்திரம் ஒன்றுகுறுகிய கால காமா கதிர் வெடிப்பை ஏற்படுத்த முடியும் என்பதைக்  காட்டியது.   இந்தப் பணியில், இந்தியாவில் இருந்து புனேவில் உள்ள வானியல் மற்றும் வான் இயற்பியலுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மையம் (IUCAA),  புனேவில் உள்ள ரேடியோ வான் இயற்பியல்  தேசிய மையம் - டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் (NCRA) மற்றும் மும்பை ஐஐடி ஆகியவை பங்கெடுத்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739396

                                                                                                                        ------


(Release ID: 1739479) Visitor Counter : 306


Read this release in: English , Hindi , Bengali , Punjabi