ஜல்சக்தி அமைச்சகம்

மேகதாட்டு விவகாரம்: மைசூர் மற்றும் சென்னைக்கு இடையேயான 1892 ஒப்பந்தம் குறித்து அமைச்சரின் விளக்கம்

Posted On: 26 JUL 2021 4:22PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஆறுகளின் குறுக்கே புதிய பாசன திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மைசூர் மற்றும் மதராஸ் மாநிலங்களுக்கிடையே (தற்போதைய கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு) 1892-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.

இதன் படி, புதிய நீர்த்தேக்கம் அல்லது அணையை மைசூரு அரசு கட்ட விரும்பினால், அதன் முழு திட்டத்தையும் சென்னை அரசுக்கு அனுப்பி அதன் ஒப்புதலை பணி தொடங்குவதற்கு முன் பெற வேண்டும். அதே சமயம், அதன் உரிமையை பாதுகாப்பதற்கு தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் ஒப்புதல் அளிக்க சென்னை அரசு மறுக்கக் கூடாது.

மேகதாட்டு நீர்த்தேக்கம் மற்றும் குடி தண்ணீர் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்தது. மத்திய நீர் ஆணையத்தின் ஆய்வுக் குழு விரிவான அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்புதலை 2018 அக்டோபர் 24 அன்று கர்நாடக அரசுக்கு அளித்தது.

இதன் பின்னர் 2019 ஜனவரியில் விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. அதன் பிரதிகள் கூட்டு பாசன மாநிலங்களின் ஒப்புதலுக்காக அவற்றுக்கு அனுப்பப்பட்டன.

மேகதாட்டு திட்டத்தை தொடங்க வேண்டாம் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் தெரிவித்து விட்டதாக 2021 ஜூலை 20 தேதியிட்ட கடிதத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

தண்ணீர் மாநில அரசின் கட்டுப்பாடுக்கு கீழ் வரும் நிலையில், நீர் வளங்களின் பராமரிப்பு, மேலாண்மை உள்ளிட்டவை மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

நாடு முழுவதும் நீர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. தண்ணீர் குறைபாடு உள்ள 256 மாவட்டங்களில் ஜல் சக்தி திட்டம்-1- இந்திய அரசு தொடங்கியது.

2021 மார்ச் 22 தண்ணீர் தினத்தன்றுஜல் சக்தி திட்டம்: மழை நீரை சேமியுங்கள்எனும் திட்டத்தை மாண்புமிகு பிரதமர் தொடங்கி வைத்தார். நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்துள்ள சில நடவடிக்கைகளை http://jalshakti-dowr.gov.in/sites/default/files/Steps_to_control_water_depletion_Feb2021.pdf எனும் இணைப்பில் காணலாம்.

ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பேலியோசேனல்கள் குறித்த ஆதாரங்கள் பற்றிய தகவல்கள், மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் திரட்டப்பட்டுள்ளன.

தேசிய நிலத்தடி நீர் ஆதாரங்கள் கண்டறிதல் மற்றும் மேலாண்மை திட்டத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது. தண்ணீர் மாநில அரசின் கட்டுப்பாடுக்கு கீழ் வரும் நிலையில், பேலியோசேனல்களின் ஆய்வு மற்றும் பராமரிப்பு மாநிலங்களின் பொறுப்பாகும். இருந்த போதிலும், மத்திய நிலத்தடி நீர் வாரியம் சில ஆய்வுகளை செய்து வருகிறது.

ஆறுகளை தூய்மைப்படுத்துதல் தொடர் நடவடிக்கையாக உள்ள நிலையில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு ஜல் சக்தி அமைச்சகம் உதவி அளித்து வருகிறது.

2015-16 முதல் 2020-21 நிதி ஆண்டு வரை, தேசிய கங்கை திட்டத்தின் கீழ் ரூ 4,631.40 கோடியையும், படித்துறை பணிகளுக்காக ரூ 217 கோடியையும் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் பாதிப்பு உண்டாக்கக்கூடிய ரசாயனங்கள் கலந்திருப்பது குறித்து அரசு அறியும். மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீரை வழங்குவதற்காக மாநிலங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

தமிழகத்தை பொருத்த வரை, 28 மாவட்டங்களில் உப்புத்தன்மை கொண்ட நீரும், 25 மாவட்டங்களில் ஃபுளோரைடு அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் 1.5 மில்லிகிராமை விட அதிகமாக இருப்பதும், 29 மாவட்டங்களில் நைட்ரேட் அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் 45 மில்லிகிராமை விட அதிகமாக இருப்பதும், 9 மாவட்டங்களில் ஆர்சனிக் அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் 0.01 மில்லிகிராமை விட அதிகமாக இருப்பதும், 2 மாவட்டங்களில் இரும்பின் அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் 1 மில்லிகிராமை விட அதிகமாக இருப்பதும், 3 மாவட்டங்களில் லீடின் அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் 0.01 மில்லிகிராமை விட அதிகமாக இருப்பதும், 1 மாவட்டத்தில் காட்மியம் அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் 0.003 மில்லிகிராமை விட அதிகமாக இருப்பதும், 5 மாவட்டங்களில் குரோமியம் அளவு ஒரு லிட்டர் தண்ணீரில் 0.05 மில்லிகிராமை விட அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தண்ணீர் மாநில அரசின் கட்டுப்பாடுக்கு கீழ் வரும் நிலையில், நீர் வளங்களின் பராமரிப்பு, மேலாண்மை உள்ளிட்டவை மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவின் நீர் இருப்பு குறித்த மறு மதிப்பீடுஎனும் ஆய்வை மத்திய நீர் ஆணையம் 2019-ல் நடத்தியது. அந்த ஆய்வின் படி, நாட்டிலுள்ள 20 படுகைகளில் சராசரி வருடாந்திர நீர் வளங்களின் அளவு 1999.20 பில்லியன் கியூபிக் மீட்டர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், நிலத்தடி நீர் அளவை பொருத்தமட்டில் 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 1114 அலகுகள் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பகுதிகள் என்றும், 270 அலகுகள் அபாய கட்டத்தில் உள்ளதாகவும், 1057 அலகுகள் ஓரளவு அபாய கட்டத்தில் உள்ளதாகவும், 4427 அலகுகள் பாதுகாப்பானவை என்றும், 97 அலகுகள் உப்புத்தன்மை மிக்கவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன.

போலவரம் திட்டத்தை ஆந்திரப் பிரதேச அரசு செயல்படுத்தும் போதிலும், வடிவமைப்பு ஒப்புதல்கள் மத்திய நீர் ஆணையத்தால் வழங்கப்பட்டன. மேலும் திட்டத்தின் பாசன பகுதிக்கான மிச்சமிருக்கும் செலவில் 100 சதவீதத்தை இந்திய அரசு திரும்ப வழங்கும்.

உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமான அடல் புஜன் யோஜனாவின் மொத்த மதிப்பீடு ரூ 6000 கோடியாகும். இதில் ரூ 3000 கோடியை உலக வங்கி கடனாக வழங்குகிறது.

குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் இருக்கும் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய ஆற்றுப்படுகை அட்லஸ் மத்திய நீர் ஆணையம் மற்றும் இஸ்ரோவால் 2012-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்திய நீர்நிலை அட்லஸ் 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவின் நீர் இருப்பு குறித்த மறு மதிப்பீடுஎனும் ஆய்வை மத்திய நீர் ஆணையம் 2019-ல் நடத்தியது. இவ்வாறு, நீர் நிலவரங்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

பிரதமரின் கிரிஷி சின்ச்சயி யோஜனாவின் கீழ் 2015 முதல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விரிவுபடுத்தப்பட்ட பாசன பலன் திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டு ரூ 3307.88 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 3593.61 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 2849.07 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 1738.76 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 1510.04 கோடியும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

ஹர் கேட் கோ பானி திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டு ரூ 1001.91 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 1678.13 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 1343.23 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 1217.97 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 976.53 கோடியும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

ஒரு துளிக்கு அதிக விளைச்சல் திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டு ரூ 1991.24 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 2819.49 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 2918.38 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 2700.01 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 2562.18 கோடியும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

நீர்நிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டு ரூ 1471.72 கோடியும், 2017-18-ம் ஆண்டு ரூ 1691.82 கோடியும், 2018-19-ம் ஆண்டு ரூ 1780.55 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ 1472.33 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 990.23 கோடியும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

தேசிய நதியான கங்கை மற்றும் அதன் துணை நதிகளில் மாசை தடுத்து, அவற்றை பாதுகாத்து புனரமைப்பதற்காக ரூ 20,000 கோடி மதிப்பீட்டில் நமாமி கங்கை திட்டம் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அரசால் தொடங்கப்பட்டது.

2020 ஜூன் 30-ன் படி, நமாமி கங்கை திட்டத்தின் கீழ் தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கத்திடம் ரூ 1040.63 கோடி நிதி இருக்கிறது.

ஜல் சக்தி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் மத்திய அரசு நிதியுதவி பெற்ற திட்டமான தேசிய நதி பாதுகாப்பு திட்டம், கங்கை படுகையை தவிர நாட்டிலிருக்கும் இதர ஆறுகளில் மாசை தடுப்பதற்காக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை மத்திய அரசு வழங்கி வருகிறது,. மொத்தம் 64 ஆற்றுப் பகுதிகள் மாசடைந்ததாக இத்திட்டத்தின் கிழ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் இழ் தமிழ்நாட்டிற்கு 2019-2020-ம் ஆண்டு ரூ 1.37 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ 1.20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739075

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739097

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739078

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739081

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739084

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739086

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739089

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739090

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739092

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739093

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739094

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739096

                                                                                                                              --------

 



(Release ID: 1739244) Visitor Counter : 245


Read this release in: English , Punjabi