இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை பகிர்வதற்காக தொடங்கப்பட்ட ஐ-ஸ்டெம் இணையதளம் 2வது கட்டத்தில் நுழைகிறது: 5 ஆண்டு நீட்டிப்புக்கு அனுமதி

Posted On: 25 JUL 2021 7:14PM by PIB Chennai

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை பகிர்வதற்காக தொடங்கப்பட்ட -ஸ்டெம் இணையதளம் 2வது கட்டத்தில் நுழைகிறது. இதற்கு  5 ஆண்டு நீட்டிப்பை, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வழங்கியுளளது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை பகிர்ந்து கொள்வதற்காக -ஸ்டெம் (The Indian Science Technology and Engineering facilities Map (I-STEM), என்ற தேசிய இணையதளம் கடந்த 2020 ஜனவரியில், பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.

-ஸ்டெம்  (www.istem.gov.in)  என்ற இந்த இணையதளம் பிரதமரின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஆலோசனை கவுன்சில் (PM-STIAC) திட்டத்தின் கீழ் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் முயற்சியால் தொடங்கப்பட்டது.

-ஸ்டெம் திட்டத்துக்கு, 2026ம் ஆண்டு வரை 5 ஆண்டு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டம் கூடுதல் அம்சங்களுடன் 2வது கட்டத்துக்கு நுழைகிறது.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி வளங்களை ஒருங்கிணைத்து நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலை வலுப்படுத்துவதுதான் -ஸ்டெம் திட்டத்தின் இலக்கு. இது நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு, ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் நிதியை -ஸ்டெம் இணையதளம் மூலம் வழங்குகிறது.

இரண்டாவது திட்டத்தின் கீழ், இந்த -ஸ்டெம் இணையதளம், டிஜிட்டல் அட்டவணை மூலம் பட்டியலிடப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்ப தயாரிப்புகளை  வழங்கும். இந்த இணையதளம்பல்வேறு நகர அறிவு மற்றும் கண்டுபிடிப்புக் தொகுப்புகளுக்கான தளத்தையும் வழங்கும். (https://www.psa.gov.in/st-clusters)

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738848

***(Release ID: 1738884) Visitor Counter : 294


Read this release in: English , Hindi , Punjabi , Telugu