வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
கிழக்கின் விண்வெளி தொழில்நுட்ப தலைநகரமாக ஷில்லாங்கை வடகிழக்கு விண்வெளி பயன்பாடுகள் மையம் மாற்றும்: மத்திய அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி
Posted On:
24 JUL 2021 7:10PM by PIB Chennai
பிரச்சினைகள் மற்றும் சவால்களை விண்வெளி தொழில்நுட்பத்தின் உதவியுடன் எதிர்கொள்வதற்கான திறனை வடகிழக்கு விண்வெளி பயன்பாடுகள் மையம் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது என்று மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி கூறினார்.
“ஒட்டுமொத்த வடகிழக்கு பகுதியின் முன்னேற்றம் மற்றும் திட்டமிடலுக்கு தேவைப்படும் உள்ளீடுகளையும் இந்த அமைப்பு வழங்கி வருகிறது,” என்று அவர் கூறினார்.
ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு விண்வெளி பயன்பாடுகள் மைய சங்கத்தின் கூட்டத்தில் பேசிய திரு கிஷண் ரெட்டி, 2014 முதல் 2021 வரையிலான ஆண்டுகளில் மையத்தின் சொத்து மதிப்பு ரூ 41.6 கோடியில் இருந்து ரூ 112 கோடியாக மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக கூறினார்.
‘அனவருடன், அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் நலம்’ எனும் பிரதமரின் உறுதிக்கு தெளிவான உதாரணமாக இது திகழ்வதாக கூறிய அவர், வேளாண்மை மற்றும் பட்டுப்பூச்சி வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய விண்வெளி தொழில்நுட்ப தீர்வுகள் மீது மையம் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
“அதன் இயற்கை அழகுக்காக ‘கிழக்கின் ஸ்காட்லாந்து’ என்று ஷில்லாங் அழைக்கப்படுகிறது. கிழக்கின் விண்வெளி தொழில்நுட்ப தலைநகரமாக ஷில்லாங் விரைவில் அழைக்கப்படும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்,” என்று அமைச்சர் கூறினார். இதர மாநிலங்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளும் வடகிழக்கு பகுதிக்கும் கிடைக்க வேண்டுமென்பதும், இந்தியாவின் இதர பகுதிகளுக்கு இணையாக அது வளர்ச்சி அடைய வேண்டுமென்பதும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியம் என்றும் அவர் மேலும் கூறினார்.
வடகிழக்கு விண்வெளி பயன்பாடுகள் மையத்தின் பல்நோக்கு விழா கூடம் மற்றும் விண்வெளி பொருட்காட்சி வசைக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவுடன் வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சர் பின்னர் பங்கேற்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738654
*****************
(Release ID: 1738680)
Visitor Counter : 326