வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

“புதுமுக தொழில்கள் துறைக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. 2021-ன் முதல் ஆறு மாதங்களிலேயே, மேலும் 15 யூனிகார்ன் நிறுவனங்களை இந்தியா கண்டுள்ளது” - திரு பியூஷ் கோயல்

Posted On: 24 JUL 2021 6:03PM by PIB Chennai

புதுமுக தொழில்கள் துறைக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. 2021-ன் முதல் ஆறு மாதங்களிலேயே, மேலும் 15 யூனிகார்ன் நிறுவனங்களை இந்தியா கண்டுள்ளது,” என்று இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்கள் & வர்த்தக கட்டமைப்பு குறித்த சிஐஐ-ஹோரசிஸ் இந்தியா கூட்டம் 2021-ல் பேசிய மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

இந்திய புதுமுக நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) வெறும் வர்த்தக வெற்றியாக மட்டுமே இல்லாமல், இந்தியாவை மாற்றியமைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக அவர் கூறினார். ஸ்டார்ட் அப் இந்தியா’-வை தேசிய பங்களிப்பு & தேசிய விழிப்புணர்வின்அடையாளமாக மாற்றுமாறு அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொவிட்-19 இடர்பாடுகளுக்கு இடையிலும், பொருளாதார மீட்சிக்கான தெளிவான அறிகுறிகள் நாட்டில் தெரிவதாக திரு கோயல் கூறினார். ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் உயர்ந்துள்ளன. இந்திய தொழில்துறை வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் பிரதிபலித்து வருவதாகவும், ஒவ்வொரு துறையிலும் நாடு மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

தொழில்துறை, முதலீடு மற்றும் புதுமைகள் விரும்பும் இடமாக இந்தியா திகழ்வதாகவும், கடந்த 7 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மிகப்பெரிய அளவிலான டிஜிட்டல் மயம், நவீனமயம், எளிமைப்படுத்தல் மற்றும் வசதியளித்தல் ஆகியவை இந்த முக்கிய மாற்றங்களில் சில என்று அவர் கூறினார்.

தற்சார்பு இந்தியா என்றால் நமது கதவுகளை உலகத்தை நோக்கி மூடுவது அல்ல என்றும், அதிக நம்பிக்கை மற்றும் போட்டித்திறனுடன் நாம் செயல்படுவதற்கான அதிகாரத்தை அளிப்பதே அதன் நோக்கம்  என்றும் திரு கோயல் கூறினார்.

நாளைக்கான வலுவான இந்தியாவை கட்டமைத்தல்எனும் லட்சியத்தில் இந்திய அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738632

*****************(Release ID: 1738662) Visitor Counter : 140