சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல் - 188வது நாள் : இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 42 கோடி இலக்கை கடந்தது
Posted On:
22 JUL 2021 8:08PM by PIB Chennai
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று மாலை 7 மணி நிலவரப்படி 42 கோடியை கடந்தது.
இன்று 48.86 லட்சத்துக்கும் மேற்பட்ட (48,86,103) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.
18 முதல் 44 வயது பிரிவினருக்கு, இன்று 23,62,689 தடுப்பூசிகள் முதல் டோஸாகவும், 2,14,281 தடுப்பூசிகள் 2வது டோஸாகவும் செலுத்தப்பட்டன.
மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டம் தொடங்கியதில் இருந்து, மொத்தம் 37 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 18 முதல் 44 வயது பிரிவினரில் 13,29,60,281 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், மொத்தம் 55,40,162 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
18 முதல் 44 வயது பிரிவினரில், தமிழகத்தில் இதுவரை 76,81,546 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 365688 பேர் 2வது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 239598 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 1868 பேர் 2வது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737887
----
(Release ID: 1737903)
Visitor Counter : 271